• Nov 28 2024

நீர் விநியோகத்தில் தடை! இலங்கை மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Chithra / Mar 10th 2024, 1:21 pm
image

 

நீர் விநியோகத்தில் தடைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தினசரி தண்ணீர் தேவை அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் வழங்கவோ அல்லது நீர் விநியோகத்தை மட்டுப்படுத்தவோ வேண்டியுள்ளது.

இது தொடர்பாக முறைப்பாடுகளைத் தெரிவிக்க 1939 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பத்தலே மற்றும் பியகம நீர் நீரேற்று நிலையங்களுக்குள் உப்பு உட்புகுவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக உப்புத் தடுப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

நீர் விநியோகத்தில் தடை இலங்கை மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு  நீர் விநியோகத்தில் தடைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தினசரி தண்ணீர் தேவை அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் வழங்கவோ அல்லது நீர் விநியோகத்தை மட்டுப்படுத்தவோ வேண்டியுள்ளது.இது தொடர்பாக முறைப்பாடுகளைத் தெரிவிக்க 1939 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, அம்பத்தலே மற்றும் பியகம நீர் நீரேற்று நிலையங்களுக்குள் உப்பு உட்புகுவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக உப்புத் தடுப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement