• May 05 2024

இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் வென்றது!Samugammedia

Tamil nila / Dec 17th 2023, 6:51 pm
image

Advertisement

டுபாயில் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியின் பங்களாதேஷ் இளையோர் அணி வெற்றி பெற்றுள்ளது.

இறுதி போட்டியில் பங்களாதேஷ் இளையோர் அணி மற்றும் ஐக்கிய அரபு அமீரக இளையோர் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரக இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் இளையோர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 283 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரக இளையோர் அணி 24.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான 19 வயதிற்குட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.


இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் வென்றதுSamugammedia டுபாயில் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியின் பங்களாதேஷ் இளையோர் அணி வெற்றி பெற்றுள்ளது.இறுதி போட்டியில் பங்களாதேஷ் இளையோர் அணி மற்றும் ஐக்கிய அரபு அமீரக இளையோர் அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரக இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் இளையோர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இந்தநிலையில், 283 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரக இளையோர் அணி 24.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.இதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான 19 வயதிற்குட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement