• Jul 27 2024

இளைஞன் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதல்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Chithra / Apr 14th 2024, 8:40 am
image

Advertisement

 

அநுராதபுரம் - மதவாச்சி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இளைஞன் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரைவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.

அந்த இளைஞன் மீது பொலிஸார் நடத்திய கொடூரத் தாக்குதலின் விளைவாக கடந்த 9 ஆம் திகதி அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சத்திரசிகிச்சை மூலம் அவரது விதைப்பை ஒன்று அகற்றப்பட்டது.

இந்தநிலையில், சட்டத்தின் முழு அளவிற்கு குறித்த குற்றவாளிகள் பொறுப்புக்கூற வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றும்போது மேற்கொள்ளும் எந்தவொரு மிருகத்தனமான நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை கோடிட்டுக் காட்டியுள்ளது..

இளைஞன் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதல்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை  அநுராதபுரம் - மதவாச்சி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இளைஞன் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரைவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.அந்த இளைஞன் மீது பொலிஸார் நடத்திய கொடூரத் தாக்குதலின் விளைவாக கடந்த 9 ஆம் திகதி அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சத்திரசிகிச்சை மூலம் அவரது விதைப்பை ஒன்று அகற்றப்பட்டது.இந்தநிலையில், சட்டத்தின் முழு அளவிற்கு குறித்த குற்றவாளிகள் பொறுப்புக்கூற வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.பொலிஸ் அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றும்போது மேற்கொள்ளும் எந்தவொரு மிருகத்தனமான நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை கோடிட்டுக் காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement