• May 17 2024

மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் பினாமி - சூனிய அரசியல்வாதிகள்..! போட்டுத்தாக்கிய அமைச்சர் டக்ளஸ் samugammedia

Chithra / Apr 15th 2023, 7:46 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை  இன்று சனிக்கிழமை (15) மாலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

இதன்போது இரணைமடு மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு அண்மையில் சீன நாட்டவருக்கு காணி வழங்கப்படவுள்ளதாக நிலவும் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ்,

குறித்த கருத்துக்களை தெரிவிக்கும் அரசியல்வாதிகள் பினாமி அரசியலை நடாத்துபவர்களாகவும் சூனிய அரசியலை நடாத்துபவர்களாகவும் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக வைத்திருக்க விரும்பும் அரசியல்வாதிகளின் உளறல் மட்டுமே.

இவ்விடயம் தொடர்பில் எவ்வித உண்மைத் தன்மைகளும் இல்லை.

இவர்கள் மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களாகக் காணப்படுவதையே வரலாறும் காட்டி நிற்கின்றது.

இதேவேளை, இலங்கையில் காணப்படும் நூற்றுக்கணக்கான தீவுகளுக்காக அமைச்சரவைப் பத்திரம் கொண்டுவரப்பட்டது. 

வடக்கு கிழக்கில் காணப்படும் தீவுகளில் நிர்வாகம் மற்றும் தீர்மானமெடுத்தல் யாருக்கு அமைய வேண்டும் என்பதிலே எனது எதிபார்ப்பு அமைந்துள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பெரிய தீவுக்கூட்டங்கள் இருப்பினும் அவை வழமை போன்று மாவட்ட அதிகார சபைக்குட்பட்டே நிர்வகிக்கப்படும்.

இவ் அபிவிருத்தி சபைகள் மூலம் அபிவிருத்தி முதலீடுகளை மட்டுமே மேற்காள்ள முடியும். எனவே அந்தந்த பகுதிக்குரிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும். 

இதுவரை இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இனி வருங்காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை.- என்றார்

மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் பினாமி - சூனிய அரசியல்வாதிகள். போட்டுத்தாக்கிய அமைச்சர் டக்ளஸ் samugammedia யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை  இன்று சனிக்கிழமை (15) மாலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.இதன்போது இரணைமடு மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு அண்மையில் சீன நாட்டவருக்கு காணி வழங்கப்படவுள்ளதாக நிலவும் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ்,குறித்த கருத்துக்களை தெரிவிக்கும் அரசியல்வாதிகள் பினாமி அரசியலை நடாத்துபவர்களாகவும் சூனிய அரசியலை நடாத்துபவர்களாகவும் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக வைத்திருக்க விரும்பும் அரசியல்வாதிகளின் உளறல் மட்டுமே.இவ்விடயம் தொடர்பில் எவ்வித உண்மைத் தன்மைகளும் இல்லை.இவர்கள் மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களாகக் காணப்படுவதையே வரலாறும் காட்டி நிற்கின்றது.இதேவேளை, இலங்கையில் காணப்படும் நூற்றுக்கணக்கான தீவுகளுக்காக அமைச்சரவைப் பத்திரம் கொண்டுவரப்பட்டது. வடக்கு கிழக்கில் காணப்படும் தீவுகளில் நிர்வாகம் மற்றும் தீர்மானமெடுத்தல் யாருக்கு அமைய வேண்டும் என்பதிலே எனது எதிபார்ப்பு அமைந்துள்ளது.குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பெரிய தீவுக்கூட்டங்கள் இருப்பினும் அவை வழமை போன்று மாவட்ட அதிகார சபைக்குட்பட்டே நிர்வகிக்கப்படும்.இவ் அபிவிருத்தி சபைகள் மூலம் அபிவிருத்தி முதலீடுகளை மட்டுமே மேற்காள்ள முடியும். எனவே அந்தந்த பகுதிக்குரிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும். இதுவரை இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இனி வருங்காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை.- என்றார்

Advertisement

Advertisement

Advertisement