• Nov 26 2024

பகவத்கீதை மஹோற்சவம் இம்முறை இலங்கையில்...!samugammedia

Sharmi / Feb 14th 2024, 11:58 am
image

சர்வதேச ஸ்ரீமத் பகவத் கீதை மஹோற்சவத்தை இம்முறை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி அமைச்சரவை வழங்கியுள்ளது

குறித்த விடயம் தொடர்பில்  மேலும் தெரிய வருவதாவது, 

இந்து பக்தர்களின் புனித நூலாகக் கருதப்படும் ஸ்ரீமத் பகவத் கீதை தொடர்பாக சமய நிகழ்வுகள் மற்றும் மதிப்பளித்தலை வழங்குவதற்காக இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையால் வருடாந்தம் பகவத்கீதை மகோற்சவம் நடாத்தப்படும்.

அண்மைய ஆண்டுகளில் குறித்த மகோற்சவம் வெளிநாடுகளில் நடாத்தப்பட்டுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டின் சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை மகோற்சவத்தை இலங்கையில் நடாத்த முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சரா விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில்,  இந்த மஹோற்சவம் மார்ச் முதலாம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதிவரை கொழும்பு தாமரைத் தடாக வளாகத்தில் நடைபெறவுள்ளது.


பகவத்கீதை மஹோற்சவம் இம்முறை இலங்கையில்.samugammedia சர்வதேச ஸ்ரீமத் பகவத் கீதை மஹோற்சவத்தை இம்முறை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி அமைச்சரவை வழங்கியுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில்  மேலும் தெரிய வருவதாவது, இந்து பக்தர்களின் புனித நூலாகக் கருதப்படும் ஸ்ரீமத் பகவத் கீதை தொடர்பாக சமய நிகழ்வுகள் மற்றும் மதிப்பளித்தலை வழங்குவதற்காக இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையால் வருடாந்தம் பகவத்கீதை மகோற்சவம் நடாத்தப்படும்.அண்மைய ஆண்டுகளில் குறித்த மகோற்சவம் வெளிநாடுகளில் நடாத்தப்பட்டுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டின் சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை மகோற்சவத்தை இலங்கையில் நடாத்த முன்மொழியப்பட்டுள்ளது.இதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சரா விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்நிலையில்,  இந்த மஹோற்சவம் மார்ச் முதலாம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதிவரை கொழும்பு தாமரைத் தடாக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement