• May 18 2024

முஸ்லிம் கட்சிகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்காக கட்சியை சீர்குலைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது...!உதுமாலெப்பை தெரிவிப்பு...! samugammedia

Sharmi / Feb 14th 2024, 12:14 pm
image

Advertisement

கட்சியினை பலப்படுத்தி ஜனரஞ்சகமாக்கி நமது சமூகமும், நாமும் நன்மை பெறும் விடயங்களில் நாம் ஈடுபட வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர்  எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

சாய்ந்தமருது 21ம் வட்டாரத்தில் அமைந்துள்ள 05,07,08,09,ம் கிராம சேவகர் பிரிவுகளில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சிக் கிளைகள் புனரமைப்புக் கூட்டம் சாய்ந்தமருது 21ம் வட்டார வேட்பாளர் பாமி மன்சூர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய  எம்.எஸ்.உதுமாலெப்பை தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது,

முஸ்லிம் கட்சிகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்காக கட்சியையும்,கட்சிக் கட்டமைப்புக்களையும் சீர்குலைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கட்சி விசுவாசம் என்பது மிக முக்கியமானதாகும்.  அது மனட் சாட்சியுடன் தொடர்பான விடயமாகும்.நாம் எப்போதும் கட்சிக்கும்,தலைமைக்கும்,நமது மக்களுக்கும் விசுவாசமாக இருந்து செயல்பட வேண்டும்.

தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் மக்களுடன் இணைந்து நமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் நமது கட்சி வளர்ச்சி அடையும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அம்பாறை மாவட்டத்தில் 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் 2 ராஜாங்க அமைச்சர்கள் அமைச்சரவை அமைச்சராக கட்சியின் தலைவரும் பதவியில்  இருந்து பாரிய அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

நல்லாட்சி அரசாங்க ஆட்சி காலம் நிறைவடைந்து ஜனாதிபதி தேர்தல் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தல் அதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் அரசாங்கத்திக்கும் எதிராக அம்பாறை மாவட்ட மக்களால் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக கட்சியின் தலைவரினால் விஷேட குழு நியமிக்கப்பட்டது.

இக் குழுவினர்கள் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள எல்லா முஸ்லிம் பிரதேசங்களுக்கும் சென்றோம். மக்களுக்கும் நமது கட்சிக்கும் இடைவெளி இருந்தன.

தேர்தல் காலங்களில் மட்டும் கட்சியின் மத்திய குழுவினரையும்,செயற்பாட்டாளர்களையும்,மக்களையும் சந்தித்து தேர்தல் முடிந்தவுடன் மத்திய குழுக்களுக்கு தெரியாமல் சிறு சிறு குழுக்களும் இயங்கி எமது கட்சியின் மத்திய குழுக்களை சீரழித்துள்ளமையினால் நாங்கள் இனிமேல் கட்சி செயற்பாடுகளில் இருந்து ஒதுங்குவதாகவும் எமது குழுவிடம் கட்சி செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அமைந்துள்ள மத்திய குழுக்கள்,கட்சி முக்கியஸ்தர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கட்சியின் தலைவரிடம் அறிக்கையை சமர்பித்தோம். இதன் பிறகு கட்சியின் தலைவர்  றஊப் ஹக்கீம் (எம்.பி) யினால்  மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கிய கட்சிக் கிளைகள் புணரமைப்புக் குழு நியமிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பிரதேசங்களில்  இதுவரை கருத்து முரண்பாடுகளுடன் செயற்பட்ட கட்சி முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள்,மத்திய குழுத்தலைவர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் ஒத்துழைப்புடனும் அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் அட்டாளைச்சேனையில் இருந்து கட்சிக் கிளைகள் புணரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்து  தற்போது அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள எல்லா முஸ்லிம் பிரதேசங்களிலும்  கட்சி கிளைகள் புணரமைப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

கட்சியின் விசுவாசத்தன்மையும் கட்சியின் கட்டமைப்பையும் பாதுகாக்க வேண்டும்.தேர்தல் ஒன்று நடைபெறும் வரை நாம் எல்லோரும் உயிரோடு இருப்போம் என்பதை எப்படி நம்புவது? சில நிமிடங்களில் நமது நாட்டில் சுனாமி அலை  வந்து  13000 மக்கள் மரணித்தார்கள்.

இன்னும் சில நிமிடங்கள் சுனாமி அலைகள் நீடித்திருந்தால் அம்பாறை மாவட்டமே பாதிக்கப்பட்டிருக்கும் என்பது தான் யதார்த்தம்  ஆகும்.எனவே கட்சி,தலைமை ,நமது மக்கள் மீது எப்போதும் விசுவாசமாக செயல்பட்டால் இறைவன் நாடுவது கிடைக்கும் என்ற என்னெத்துடன் எல்லோரும் செயல்பட வேண்டும்.

இனிமேல் கட்சி கட்டமைப்பை மீறி யாரும் செயற்படக் கூடாது என்ற கட்டமைப்புக்களை உருவாக்கிய ஒவ்வொரு ஊர்களிலும் எல்லோரும் ஒன்றினைந்து மசூறா அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கக் கூடிய நிலைமையை ஏற்படுத்தி உள்ளோம். 

மக்கள் பிரதிநிதிகள்,கட்சி முக்கியஸ்தர்கள், எல்லோரும் கட்சியின் ஒற்றுமையை கருதி ஒவ்வொரு ஊர்களிலும் தங்களுக்கான குழுக்கள் ஏற்படுத்தி கட்சியை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை முற்றாக விட்டு விட்டு கட்சியை ஒற்றுமைப்படுத்தி அதன் ஊடாக எது வேண்டும் என்றாலும்  பெற்றுக் கொள்ளக் கூடிய நிலமையை  ஏற்படுத்த வேண்டும்.

சில பிரதேசங்களில் கட்சி கிளைகள்புணரமைப்புக்கூட்டங்கள் நடைபெற்ற போது கட்சியின் மத்திய குழுக்கள் கட்சிக் கிளைகள் புணரமைக்கப்பட்டு மத்திய குழுக்கள்தலைவரினால் நியமனம் செய்யப்பட்ட பின்னரும் மீண்டும் ஒவ்வொரு ஊர்களிலும் கட்சியின் கட்டமைப்புக்களை மீறி சிறு சிறு குழுக்களையும்,முகவர்களையும் மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கினால்? எமது மத்திய குழுக்களின் நிலைப்பாடு என்னவாக முடியும்?என்று கேட்டனர். நமது கட்சியின் தலைவரும்,கட்சியையும் கிராம மட்டத்தில் கட்சி கட்டமைப்புடன் செயல்படும் விடயத்தில் உறுதியாக உள்ளனர்.

இதனையும் மீறி மீண்டும் ஒவ்வொரு ஊர்களிலும்  கட்சி கட்டமைப்புக்களை மீறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால்.பிரதி தேசிய அமைப்பாளர் பதவி இருந்து விலகி விடுவேன் என்று தெரிவித்ததுள்ளேன்   எனவே கட்சியின் நன்மை கருதி கட்டமைப்பு விடயத்தில் எல்லோரும் ஒத்தழைப்பு வழங்க வேண்டும்.

சாய்ந்தமருது பிரதேசம் முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றில் பாரிய பங்களிப்பு வழங்கிய பிரதேசமாகும். நமது அருகில் அமைந்துள்ள சாய்ந்தமருது மக்களையும், வாக்குகளையும் விட்டு விட்டு அம்பாறை மாவட்டத்தில் 150Km,200kmல் தூரத்தில் அமைந்துள்ள பெருபான்ம்மை மக்களின் ஊர்களுக்கு சென்று 100,200 வாக்குகளை பெற காலம்,நேரம்,பணம் என்பவற்றையும் எமது அரசியல்வாதிகள் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பங்களை நமது கட்சிக்கு இறைவன் வழங்குவான்  என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.சாய்ந்தமருது பிரதேசத்தில் கட்சியின் வளர்ச்சி தற்போது அதிகரித்து வரும் இக்கால கட்டத்தில் கிராம மட்ட அமைப்பாளர்கள்,இளைஞர் அமைப்பாளர்கள், மகளிர் அமைப்பாளர்கள் எல்லோரும் ஒன்றினைந்து நமது கட்சியினை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத், முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளரும்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசீம்,கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர்,அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன்,முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், சாய்ந்தமருது அமைப்பாளருமான எம்.பிர்தௌஸ்,முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் எம்.எம்.பசீர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



முஸ்லிம் கட்சிகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்காக கட்சியை சீர்குலைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.உதுமாலெப்பை தெரிவிப்பு. samugammedia கட்சியினை பலப்படுத்தி ஜனரஞ்சகமாக்கி நமது சமூகமும், நாமும் நன்மை பெறும் விடயங்களில் நாம் ஈடுபட வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர்  எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.சாய்ந்தமருது 21ம் வட்டாரத்தில் அமைந்துள்ள 05,07,08,09,ம் கிராம சேவகர் பிரிவுகளில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சிக் கிளைகள் புனரமைப்புக் கூட்டம் சாய்ந்தமருது 21ம் வட்டார வேட்பாளர் பாமி மன்சூர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய  எம்.எஸ்.உதுமாலெப்பை தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது,முஸ்லிம் கட்சிகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்காக கட்சியையும்,கட்சிக் கட்டமைப்புக்களையும் சீர்குலைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.கட்சி விசுவாசம் என்பது மிக முக்கியமானதாகும்.  அது மனட் சாட்சியுடன் தொடர்பான விடயமாகும்.நாம் எப்போதும் கட்சிக்கும்,தலைமைக்கும்,நமது மக்களுக்கும் விசுவாசமாக இருந்து செயல்பட வேண்டும்.தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் மக்களுடன் இணைந்து நமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் நமது கட்சி வளர்ச்சி அடையும்.நல்லாட்சி அரசாங்கத்தில் அம்பாறை மாவட்டத்தில் 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் 2 இராஜாங்க அமைச்சர்கள் அமைச்சரவை அமைச்சராக கட்சியின் தலைவரும் பதவியில்  இருந்து பாரிய அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.நல்லாட்சி அரசாங்க ஆட்சி காலம் நிறைவடைந்து ஜனாதிபதி தேர்தல் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தல் அதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் அரசாங்கத்திக்கும் எதிராக அம்பாறை மாவட்ட மக்களால் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக கட்சியின் தலைவரினால் விஷேட குழு நியமிக்கப்பட்டது.இக் குழுவினர்கள் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள எல்லா முஸ்லிம் பிரதேசங்களுக்கும் சென்றோம். மக்களுக்கும் நமது கட்சிக்கும் இடைவெளி இருந்தன.தேர்தல் காலங்களில் மட்டும் கட்சியின் மத்திய குழுவினரையும்,செயற்பாட்டாளர்களையும்,மக்களையும் சந்தித்து தேர்தல் முடிந்தவுடன் மத்திய குழுக்களுக்கு தெரியாமல் சிறு சிறு குழுக்களும் இயங்கி எமது கட்சியின் மத்திய குழுக்களை சீரழித்துள்ளமையினால் நாங்கள் இனிமேல் கட்சி செயற்பாடுகளில் இருந்து ஒதுங்குவதாகவும் எமது குழுவிடம் கட்சி செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அமைந்துள்ள மத்திய குழுக்கள்,கட்சி முக்கியஸ்தர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கட்சியின் தலைவரிடம் அறிக்கையை சமர்பித்தோம். இதன் பிறகு கட்சியின் தலைவர்  றஊப் ஹக்கீம் (எம்.பி) யினால்  மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கிய கட்சிக் கிளைகள் புணரமைப்புக் குழு நியமிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பிரதேசங்களில்  இதுவரை கருத்து முரண்பாடுகளுடன் செயற்பட்ட கட்சி முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள்,மத்திய குழுத்தலைவர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் ஒத்துழைப்புடனும் அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் அட்டாளைச்சேனையில் இருந்து கட்சிக் கிளைகள் புணரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்து  தற்போது அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள எல்லா முஸ்லிம் பிரதேசங்களிலும்  கட்சி கிளைகள் புணரமைப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.கட்சியின் விசுவாசத்தன்மையும் கட்சியின் கட்டமைப்பையும் பாதுகாக்க வேண்டும்.தேர்தல் ஒன்று நடைபெறும் வரை நாம் எல்லோரும் உயிரோடு இருப்போம் என்பதை எப்படி நம்புவது சில நிமிடங்களில் நமது நாட்டில் சுனாமி அலை  வந்து  13000 மக்கள் மரணித்தார்கள்.இன்னும் சில நிமிடங்கள் சுனாமி அலைகள் நீடித்திருந்தால் அம்பாறை மாவட்டமே பாதிக்கப்பட்டிருக்கும் என்பது தான் யதார்த்தம்  ஆகும்.எனவே கட்சி,தலைமை ,நமது மக்கள் மீது எப்போதும் விசுவாசமாக செயல்பட்டால் இறைவன் நாடுவது கிடைக்கும் என்ற என்னெத்துடன் எல்லோரும் செயல்பட வேண்டும்.இனிமேல் கட்சி கட்டமைப்பை மீறி யாரும் செயற்படக் கூடாது என்ற கட்டமைப்புக்களை உருவாக்கிய ஒவ்வொரு ஊர்களிலும் எல்லோரும் ஒன்றினைந்து மசூறா அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கக் கூடிய நிலைமையை ஏற்படுத்தி உள்ளோம். மக்கள் பிரதிநிதிகள்,கட்சி முக்கியஸ்தர்கள், எல்லோரும் கட்சியின் ஒற்றுமையை கருதி ஒவ்வொரு ஊர்களிலும் தங்களுக்கான குழுக்கள் ஏற்படுத்தி கட்சியை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை முற்றாக விட்டு விட்டு கட்சியை ஒற்றுமைப்படுத்தி அதன் ஊடாக எது வேண்டும் என்றாலும்  பெற்றுக் கொள்ளக் கூடிய நிலமையை  ஏற்படுத்த வேண்டும்.சில பிரதேசங்களில் கட்சி கிளைகள்புணரமைப்புக்கூட்டங்கள் நடைபெற்ற போது கட்சியின் மத்திய குழுக்கள் கட்சிக் கிளைகள் புணரமைக்கப்பட்டு மத்திய குழுக்கள்தலைவரினால் நியமனம் செய்யப்பட்ட பின்னரும் மீண்டும் ஒவ்வொரு ஊர்களிலும் கட்சியின் கட்டமைப்புக்களை மீறி சிறு சிறு குழுக்களையும்,முகவர்களையும் மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கினால் எமது மத்திய குழுக்களின் நிலைப்பாடு என்னவாக முடியும்என்று கேட்டனர். நமது கட்சியின் தலைவரும்,கட்சியையும் கிராம மட்டத்தில் கட்சி கட்டமைப்புடன் செயல்படும் விடயத்தில் உறுதியாக உள்ளனர்.இதனையும் மீறி மீண்டும் ஒவ்வொரு ஊர்களிலும்  கட்சி கட்டமைப்புக்களை மீறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால்.பிரதி தேசிய அமைப்பாளர் பதவி இருந்து விலகி விடுவேன் என்று தெரிவித்ததுள்ளேன்   எனவே கட்சியின் நன்மை கருதி கட்டமைப்பு விடயத்தில் எல்லோரும் ஒத்தழைப்பு வழங்க வேண்டும்.சாய்ந்தமருது பிரதேசம் முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றில் பாரிய பங்களிப்பு வழங்கிய பிரதேசமாகும். நமது அருகில் அமைந்துள்ள சாய்ந்தமருது மக்களையும், வாக்குகளையும் விட்டு விட்டு அம்பாறை மாவட்டத்தில் 150Km,200kmல் தூரத்தில் அமைந்துள்ள பெருபான்ம்மை மக்களின் ஊர்களுக்கு சென்று 100,200 வாக்குகளை பெற காலம்,நேரம்,பணம் என்பவற்றையும் எமது அரசியல்வாதிகள் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பங்களை நமது கட்சிக்கு இறைவன் வழங்குவான்  என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.சாய்ந்தமருது பிரதேசத்தில் கட்சியின் வளர்ச்சி தற்போது அதிகரித்து வரும் இக்கால கட்டத்தில் கிராம மட்ட அமைப்பாளர்கள்,இளைஞர் அமைப்பாளர்கள், மகளிர் அமைப்பாளர்கள் எல்லோரும் ஒன்றினைந்து நமது கட்சியினை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத், முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளரும்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசீம்,கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர்,அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன்,முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், சாய்ந்தமருது அமைப்பாளருமான எம்.பிர்தௌஸ்,முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் எம்.எம்.பசீர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement