2024 நவம்பர் மாதம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
தேர்தலையொட்டி பல்வேறு கேள்விகளுடன் மக்களை சந்தித்து கருத்து கணிப்புகளையும், புள்ளி விவரங்களையும் பல அமைப்புகள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் வேட்பாளர்களின் வயது குறித்து நடத்தப்பட்ட ஒரு கருத்து கணிப்பின் முடிவு நேற்று வெளியானது.
அமெரிக்கர்களில் 86 சதவீத வாக்காளர்கள், ஜோ பைடனுக்கு 81 வயதாவதால், அப்பதவிக்கு அவர் பொருத்தமானவர் அல்ல என தெரிவித்தனர். தற்போது 77 வயதாகும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன், இருவருமே இப்பதவியில் அமர பொருத்தமற்றவர்கள் என கூறிய 59 சதவீதம் பேரும் இப்பட்டியலில் அடங்குவர்.
மேலும் 27 சதவீத வாக்காளர்கள் அதிபர் பதவியில் அமர ஜோ பைடன் மட்டுமே அதிக வயதுடையவர் என கருத்துகின்றனர். 62 சதவீத வாக்காளர்கள் அதிபராக பணியாற்ற டொனால்ட் டிரம்ப் மட்டுமே அதிக வயதுடையவர் என கூறுகின்றனர். சில மாதங்களாகவே, 75 வயதை கடந்தும், உலகிலேயே நம்பர் 1 பதவியான அமெரிக்க அதிபர் பதவிக்கு முன்னணி வேட்பாளர்களாக களமிறங்கி உள்ள இருவரின் அதிக வயதும், பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, கடந்த 2023 செப்டம்பர் மாதம், பைடனின் அதிக வயது காரணமாக அப்பதவிக்கு அவர் தகுதியானவர் அல்ல என 74 சதவீதம் பேரும், 49 சதவீதம் பேர் டிரம்ப் தகுதியானவர் அல்ல என்றும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் பதவிக்கு பைடன் மற்றும் ட்ரம்ப் தகுதியற்றவர்கள் - எதிரியானது வயது மூப்பு.samugammedia 2024 நவம்பர் மாதம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.தேர்தலையொட்டி பல்வேறு கேள்விகளுடன் மக்களை சந்தித்து கருத்து கணிப்புகளையும், புள்ளி விவரங்களையும் பல அமைப்புகள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் வேட்பாளர்களின் வயது குறித்து நடத்தப்பட்ட ஒரு கருத்து கணிப்பின் முடிவு நேற்று வெளியானது.அமெரிக்கர்களில் 86 சதவீத வாக்காளர்கள், ஜோ பைடனுக்கு 81 வயதாவதால், அப்பதவிக்கு அவர் பொருத்தமானவர் அல்ல என தெரிவித்தனர். தற்போது 77 வயதாகும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன், இருவருமே இப்பதவியில் அமர பொருத்தமற்றவர்கள் என கூறிய 59 சதவீதம் பேரும் இப்பட்டியலில் அடங்குவர்.மேலும் 27 சதவீத வாக்காளர்கள் அதிபர் பதவியில் அமர ஜோ பைடன் மட்டுமே அதிக வயதுடையவர் என கருத்துகின்றனர். 62 சதவீத வாக்காளர்கள் அதிபராக பணியாற்ற டொனால்ட் டிரம்ப் மட்டுமே அதிக வயதுடையவர் என கூறுகின்றனர். சில மாதங்களாகவே, 75 வயதை கடந்தும், உலகிலேயே நம்பர் 1 பதவியான அமெரிக்க அதிபர் பதவிக்கு முன்னணி வேட்பாளர்களாக களமிறங்கி உள்ள இருவரின் அதிக வயதும், பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.இதேவேளை, கடந்த 2023 செப்டம்பர் மாதம், பைடனின் அதிக வயது காரணமாக அப்பதவிக்கு அவர் தகுதியானவர் அல்ல என 74 சதவீதம் பேரும், 49 சதவீதம் பேர் டிரம்ப் தகுதியானவர் அல்ல என்றும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.