• Nov 21 2024

யாழ்ப்பாண ஜின்னா மைதானத்தில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை...!

Sharmi / Jun 17th 2024, 1:20 pm
image

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் இன்று (17) காலை 6.30 மணியளவில் மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி) தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய பெருநாள் தொழுகையானது மர்யம் மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி) பெருநாள் தொழுகையை நடாத்தியிருந்ததுடன், ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கியத்தும், நபி இப்ராஹீம் அலை அவர்களின் வாழ்வின் தியாகங்கள், அவரின் வாழ்க்கையின் முக்கிய படிப்பினைகளை கருப்பொருளாகக் கொண்டு பெருநாள் விசேட உரையும் நிகழ்த்தியிருந்தார்.

பெருநாள் தொழுகைக்காக ஜின்னா மைதான திடலில் இன்று ஆண்கள், உலமாக்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.













யாழ்ப்பாண ஜின்னா மைதானத்தில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை. யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் இன்று (17) காலை 6.30 மணியளவில் மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி) தலைமையில் இடம்பெற்றது.இன்றைய பெருநாள் தொழுகையானது மர்யம் மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி) பெருநாள் தொழுகையை நடாத்தியிருந்ததுடன், ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கியத்தும், நபி இப்ராஹீம் அலை அவர்களின் வாழ்வின் தியாகங்கள், அவரின் வாழ்க்கையின் முக்கிய படிப்பினைகளை கருப்பொருளாகக் கொண்டு பெருநாள் விசேட உரையும் நிகழ்த்தியிருந்தார்.பெருநாள் தொழுகைக்காக ஜின்னா மைதான திடலில் இன்று ஆண்கள், உலமாக்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement