மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஞங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது, இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பன்சிதேவா பகுதியில் சரக்கு ரயில் மீது மக்களை ஏற்றி செல்லும் கன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இந்த பெட்டிகளில் இருந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தற்போது சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ரயில்கள் மோதி கோர விபத்து: 15 பேர் உயிரிழப்பு. மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஞங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர்.குறித்த விபத்தானது, இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பன்சிதேவா பகுதியில் சரக்கு ரயில் மீது மக்களை ஏற்றி செல்லும் கன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இந்த பெட்டிகளில் இருந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.விபத்தின் இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.தற்போது சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.