• May 20 2024

மின்சார சபையை தனியார் மயமாக்கும் சட்டம் - அரசுக்கு சிவப்பு சமிஞ்சை..! samugammedia

Chithra / Jun 11th 2023, 2:31 pm
image

Advertisement

மின்சார சபையை தனியார் மயமாக்கும் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின்சார வாரியத்தை 15 நிறுவனங்களாகப் பிரிக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 6 வாரங்கள் கடந்ததும், அக்டோபர் 1-ஆம் திகதி முதல் இந்த 15 நிறுவனங்களையும் அந்த சட்டமூலத்தின்படி தான் செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளன.

இந்த சட்டத்தின் ஏற்பாடாக இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஓய்வூதியத்தை உள்ளடக்குவதில்லை என தீர்மானம் எடுத்துள்ளனர்.

நிறுவனங்களுக்கு மின் வாரியத்தை வழங்கும் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இல்லையேல் 21ம் திகதி மின்சார வாரியத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து மின்வாரிய அலுவலகத்தை விட்டு அனைவரும் வெளியேறி விகாரமஹாதேவி பூங்காவில் ஒன்று கூடுவோம். இது அரசாங்கத்திற்கும் எளிதாகும். என்றுள்ளது.

மின்சார சபையை தனியார் மயமாக்கும் சட்டம் - அரசுக்கு சிவப்பு சமிஞ்சை. samugammedia மின்சார சபையை தனியார் மயமாக்கும் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மின்சார வாரியத்தை 15 நிறுவனங்களாகப் பிரிக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 6 வாரங்கள் கடந்ததும், அக்டோபர் 1-ஆம் திகதி முதல் இந்த 15 நிறுவனங்களையும் அந்த சட்டமூலத்தின்படி தான் செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளன.இந்த சட்டத்தின் ஏற்பாடாக இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஓய்வூதியத்தை உள்ளடக்குவதில்லை என தீர்மானம் எடுத்துள்ளனர்.நிறுவனங்களுக்கு மின் வாரியத்தை வழங்கும் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இல்லையேல் 21ம் திகதி மின்சார வாரியத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து மின்வாரிய அலுவலகத்தை விட்டு அனைவரும் வெளியேறி விகாரமஹாதேவி பூங்காவில் ஒன்று கூடுவோம். இது அரசாங்கத்திற்கும் எளிதாகும். என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement