• May 21 2024

சாரதி அனுமதி அட்டை தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவித்தல்..! samugammedia

Chithra / Jun 11th 2023, 2:36 pm
image

Advertisement

இலங்கையில் இதுவரையில் வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எட்டரை இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் மூன்றாம் தரப்பினரால் அச்சிடப்பட்டு உரிமதாரர்களுக்கு வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மட்டும் 6 அல்லது 7 மாதங்களுக்குள் மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


சாரதி அனுமதி அட்டை தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவித்தல். samugammedia இலங்கையில் இதுவரையில் வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.இதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.எட்டரை இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் மூன்றாம் தரப்பினரால் அச்சிடப்பட்டு உரிமதாரர்களுக்கு வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மட்டும் 6 அல்லது 7 மாதங்களுக்குள் மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement