• Nov 24 2024

பறவைக் காய்ச்சல் எதிரொலி- 42 லட்சம் கோழிகளைக் கொல்ல உத்தரவு!

Tamil nila / May 30th 2024, 7:11 pm
image

அமெரிக்காவின் டெஸ் மோனெஸ்ஸில் கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து 42 லட்சம் கோழிகளைக் கொல்ல அமெரிக்க விவசாயத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதாவது அயோவாவின் சியோக்ஸ் கவுண்டியில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதையடுத்து 42 லட்சம் கோழிகளை கொல்லும் பணியில் பண்ணை ஊழியர் ஈடுபட்டுள்ளனர்.

மின்னசோட்டா மாகாணம் மின்னேபோலிஸ்ஸுக்கு வடக்கே உள்ள கோழிப் பண்ணையில் கடந்த வாரம் பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டதில் ஏற்கனவே 14 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டன.

கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து மட்டும் இதுவரை 9 கோடியே 20 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நோய்த் தொற்று கறவை மாடுகளையும் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு வெளிப்படும் நோய்த் தொற்றால் தொழிலாளர்களும் அதிக ஆபத்தில் உள்ளனர். அமெரிக்காவில் நோய் பாதிக்கப்பட்ட மூன்று பேரில் இரண்டு பேர் பால் பண்ணைத் தொழிலாளர்கள், மேலும் ஒருவர் கோழிப்பண்ணையில் பாதிக்கப்பட்ட பறவைகளை கொல்லும் வேலை செய்பவர் ஆவார்.

பறவைக் காய்ச்சல் எதிரொலி- 42 லட்சம் கோழிகளைக் கொல்ல உத்தரவு அமெரிக்காவின் டெஸ் மோனெஸ்ஸில் கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து 42 லட்சம் கோழிகளைக் கொல்ல அமெரிக்க விவசாயத் துறை உத்தரவிட்டுள்ளது.அதாவது அயோவாவின் சியோக்ஸ் கவுண்டியில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதையடுத்து 42 லட்சம் கோழிகளை கொல்லும் பணியில் பண்ணை ஊழியர் ஈடுபட்டுள்ளனர்.மின்னசோட்டா மாகாணம் மின்னேபோலிஸ்ஸுக்கு வடக்கே உள்ள கோழிப் பண்ணையில் கடந்த வாரம் பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டதில் ஏற்கனவே 14 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டன.கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து மட்டும் இதுவரை 9 கோடியே 20 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை தெரிவித்துள்ளது.இந்த நோய்த் தொற்று கறவை மாடுகளையும் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு வெளிப்படும் நோய்த் தொற்றால் தொழிலாளர்களும் அதிக ஆபத்தில் உள்ளனர். அமெரிக்காவில் நோய் பாதிக்கப்பட்ட மூன்று பேரில் இரண்டு பேர் பால் பண்ணைத் தொழிலாளர்கள், மேலும் ஒருவர் கோழிப்பண்ணையில் பாதிக்கப்பட்ட பறவைகளை கொல்லும் வேலை செய்பவர் ஆவார்.

Advertisement

Advertisement

Advertisement