• Dec 06 2024

ரணிலுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் - வஜிர அபேவர்தன புகழாரம்

Tharun / May 30th 2024, 7:14 pm
image

இலங்கை வரலாற்றில் ரணில் விக்ரமசிங்கவிற்கு வரலாற்று சிறப்புமிக்க ஆணையை வழங்குவதற்கு  இலங்கை மக்கள் ஏற்கனவே வரிசையில் நிற்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி உலுவிடிகேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியல் கட்சிகளின் பிடியில் சிக்கியவர்கள் தற்போது வெளியேறி வருவதாகவும் அதனால்தான் அரசியல் கட்சிகள் பல்வேறு கோசங்களை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்த முயல்வதாகவும் அபேவர்தன கூறியுள்ளார்.

இது தொடர்பில் முழு நாட்டு மக்களும் சிந்தித்து புரிந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், அரசியல் ரீதியாக பலவீனமான மற்றும் அதிருப்தி கொண்ட குழுக்கள் புதிய அரசியல் முறைமையை தேட முயற்சிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.  


ரணிலுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் - வஜிர அபேவர்தன புகழாரம் இலங்கை வரலாற்றில் ரணில் விக்ரமசிங்கவிற்கு வரலாற்று சிறப்புமிக்க ஆணையை வழங்குவதற்கு  இலங்கை மக்கள் ஏற்கனவே வரிசையில் நிற்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.காலி உலுவிடிகேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், அரசியல் கட்சிகளின் பிடியில் சிக்கியவர்கள் தற்போது வெளியேறி வருவதாகவும் அதனால்தான் அரசியல் கட்சிகள் பல்வேறு கோசங்களை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்த முயல்வதாகவும் அபேவர்தன கூறியுள்ளார்.இது தொடர்பில் முழு நாட்டு மக்களும் சிந்தித்து புரிந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த நிலையில், அரசியல் ரீதியாக பலவீனமான மற்றும் அதிருப்தி கொண்ட குழுக்கள் புதிய அரசியல் முறைமையை தேட முயற்சிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement