• Sep 08 2024

யாழில் கறுப்பு யூலை நினைவேந்தல் முன்னெடுப்பு

Sharmi / Jul 23rd 2024, 11:03 pm
image

Advertisement

கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் இன்று(23)  மாலை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் முற்றவெளி மைதானம் முன்பாக இன்று மாலை இவ் நினைவேந்தல் நடைபெற்றது.

 இதன்போது நினைவேந்தல் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதுடன் ஏனையவர்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர். 

 இந் நிகழ்வில் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

மேலும் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும். 1983 கறுப்பு யூலை தமிழினப் படுகொலையானது சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.

 வெலிக்கடை சிறைசாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளையும் நாடு முழுவதும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும் நினைவு கூறுகிறோம். 

 1948 முதல் இன்றுவரை நடைபெற்ற நடைபெறுகின்ற இனஅழிப்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.


யாழில் கறுப்பு யூலை நினைவேந்தல் முன்னெடுப்பு கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் இன்று(23)  மாலை அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் முற்றவெளி மைதானம் முன்பாக இன்று மாலை இவ் நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது நினைவேந்தல் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதுடன் ஏனையவர்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.  இந் நிகழ்வில் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்மேலும் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும். 1983 கறுப்பு யூலை தமிழினப் படுகொலையானது சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. வெலிக்கடை சிறைசாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளையும் நாடு முழுவதும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும் நினைவு கூறுகிறோம்.  1948 முதல் இன்றுவரை நடைபெற்ற நடைபெறுகின்ற இனஅழிப்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement