• Nov 22 2024

இரத்தக்கறை படிந்த பயங்கரவாத தடை சட்டம் - யுத்தத்தின் பின் கைதான போராளிகளின் குடும்பங்களின் நிலை நிர்க்கதி! சிறிதரன் எம்.பி சபையில் ஆதங்கம்

Chithra / Jan 10th 2024, 3:44 pm
image


பயங்கரவாதச் சட்டத்தின் வரலாறுகள் இரத்தக்கறை படிந்தவை என்பதால் இதுகுறித்து ஆழமான விவாதங்கள் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட போராளிகளின் குடும்பங்களின் நிலை நிர்க்கதியாகியுள்ளது.

பல்வேறுபட்ட இன அழிப்புகளையும் பல்வேறுபட்ட போர்க்குற்றங்களையும் சந்தித்தவர்கள் தமிழ் மக்கள்.

தமிழ் மக்களில் மூன்று லட்சத்திற்கு மேலான இளைஞர்கள் யுவதிகள் இந்த பயங்கரவாத தடை சட்டத்தின் கீழே கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

தங்களுடைய பிள்ளைகளையும் கணவர்களையும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஒப்படைத்தவர்களுக்கு இன்னமும் நீதிகிடைக்கவில்லை.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்றதன் பிற்பாடு முள்ளிவாய்க்காலில் இருந்து வந்த மக்களில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலை நிர்க்கதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்துள்ள போதும் இதில் தமிழ் மக்களுக்கு திருப்தி இல்லை என சிறிதரன் தெரிவித்தார்.

எனவே பயங்கரவாத சட்டத்தில் சிறு சிறு மாற்றங்களை கொண்டுவராமல் முழுமையான மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிட்டார்.

 


இரத்தக்கறை படிந்த பயங்கரவாத தடை சட்டம் - யுத்தத்தின் பின் கைதான போராளிகளின் குடும்பங்களின் நிலை நிர்க்கதி சிறிதரன் எம்.பி சபையில் ஆதங்கம் பயங்கரவாதச் சட்டத்தின் வரலாறுகள் இரத்தக்கறை படிந்தவை என்பதால் இதுகுறித்து ஆழமான விவாதங்கள் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட போராளிகளின் குடும்பங்களின் நிலை நிர்க்கதியாகியுள்ளது.பல்வேறுபட்ட இன அழிப்புகளையும் பல்வேறுபட்ட போர்க்குற்றங்களையும் சந்தித்தவர்கள் தமிழ் மக்கள்.தமிழ் மக்களில் மூன்று லட்சத்திற்கு மேலான இளைஞர்கள் யுவதிகள் இந்த பயங்கரவாத தடை சட்டத்தின் கீழே கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.தங்களுடைய பிள்ளைகளையும் கணவர்களையும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஒப்படைத்தவர்களுக்கு இன்னமும் நீதிகிடைக்கவில்லை.2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்றதன் பிற்பாடு முள்ளிவாய்க்காலில் இருந்து வந்த மக்களில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலை நிர்க்கதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.நீதி அமைச்சர் புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்துள்ள போதும் இதில் தமிழ் மக்களுக்கு திருப்தி இல்லை என சிறிதரன் தெரிவித்தார்.எனவே பயங்கரவாத சட்டத்தில் சிறு சிறு மாற்றங்களை கொண்டுவராமல் முழுமையான மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement