• May 19 2024

இலங்கையின் பல வைத்தியசாலைகளில் இரத்தம் ஏற்றும் இயந்திரங்கள் முடக்கம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள் samugammedia

Chithra / Jul 5th 2023, 1:37 pm
image

Advertisement

கல்கமுவ, குளியாப்பிட்டிய உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல பொது வைத்தியசாலைகளில் இரத்தம் ஏற்றும் இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக உயிரிழப்புகள் அதிகமாக நிலவுவதாக குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இரத்தம் ஏற்றும் இயந்திரங்களை திருத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டிருந்த போதிலும், அந்த டெண்டர்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் அதனை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பல மாதங்களுக்கு தொடர்புடைய இயந்திரங்களுக்கு தேவையான உபகரணங்களுக்காக ஒவ்வொரு வருடமும் வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு சுமார் 200 பில்லியன் ஒதுக்கப்படுவதாகவும், ஆனால் சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்தம் ஏற்றும் கருவிகளை வெளியில் இருந்து கொண்டு வருமாறு கூறுவதாகவும், வெளியில் இருந்து கொண்டு வர மக்களிடம் பணம் இல்லை எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.


தயாசிறி ஜயசேகர எழுப்பிய கதையில் ஓரளவுக்கு உண்மை இருப்பதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இது தொடர்பாக நீதிமன்றத்திடம் இருந்து உத்தரவுகள் கூட கிடைத்துள்ளதாகவும், பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பல வைத்தியசாலைகளில் இரத்தம் ஏற்றும் இயந்திரங்கள் முடக்கம் அதிகரிக்கும் உயிரிழப்புகள் samugammedia கல்கமுவ, குளியாப்பிட்டிய உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல பொது வைத்தியசாலைகளில் இரத்தம் ஏற்றும் இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக உயிரிழப்புகள் அதிகமாக நிலவுவதாக குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.சுகாதார அமைச்சின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இரத்தம் ஏற்றும் இயந்திரங்களை திருத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டிருந்த போதிலும், அந்த டெண்டர்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் அதனை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.பல மாதங்களுக்கு தொடர்புடைய இயந்திரங்களுக்கு தேவையான உபகரணங்களுக்காக ஒவ்வொரு வருடமும் வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு சுமார் 200 பில்லியன் ஒதுக்கப்படுவதாகவும், ஆனால் சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்தம் ஏற்றும் கருவிகளை வெளியில் இருந்து கொண்டு வருமாறு கூறுவதாகவும், வெளியில் இருந்து கொண்டு வர மக்களிடம் பணம் இல்லை எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.தயாசிறி ஜயசேகர எழுப்பிய கதையில் ஓரளவுக்கு உண்மை இருப்பதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இது தொடர்பாக நீதிமன்றத்திடம் இருந்து உத்தரவுகள் கூட கிடைத்துள்ளதாகவும், பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement