• May 20 2024

யாழில் இராணுவத்தால் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு புதிய வீடு..!samugammedia

Sharmi / Jul 5th 2023, 1:48 pm
image

Advertisement

இராணுவத்தால் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கான வீடு அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

சின்னையா மகன் ஜோச் அருள்ராஜ்  அவர்களின் நினைவாக சின்னையா தபிதா ,  வன்னி எயிட் ,  நான்காவது சிங்க படைப்பிரிவின் முழுமையான ஆளணி கட்டுமான உதவியுடன் குறித்த வீடு அமைக்கும் பணிகள் இன்று(05) அல்வாய் மேற்கு  தம்பியன்புலம் கிராமத்தில்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  

இன்றைய தினம் குறித்த வீடு அமைப்பதற்கான நாள் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் 4 வது சிங்க படைப்பிரிவின் தளபதி  தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கட்டைக்காடு 55வது படைப்பிரிவின் தளபதி  மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரட்ணவும் சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலர் ஆ.சிறியும், கௌரவ விருந்தினர்களாக  பருத்தித்துறை உதவி பொலீஸ் அத்தியட்சகர், பருத்தித்துறை பொது வைத்தியசாலை மருத்துவர் உமாசுதன், வன்னி எயிட் ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், பருத்தித்துறை பொலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சேந்தன், மற்றும் 551 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் யூட் காரிய கரவண, மற்றும்  இராணுவ அதிகாரிகள் கிராம சேவகர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




யாழில் இராணுவத்தால் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு புதிய வீடு.samugammedia இராணுவத்தால் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கான வீடு அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது.சின்னையா மகன் ஜோச் அருள்ராஜ்  அவர்களின் நினைவாக சின்னையா தபிதா ,  வன்னி எயிட் ,  நான்காவது சிங்க படைப்பிரிவின் முழுமையான ஆளணி கட்டுமான உதவியுடன் குறித்த வீடு அமைக்கும் பணிகள் இன்று(05) அல்வாய் மேற்கு  தம்பியன்புலம் கிராமத்தில்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  இன்றைய தினம் குறித்த வீடு அமைப்பதற்கான நாள் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் 4 வது சிங்க படைப்பிரிவின் தளபதி  தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கட்டைக்காடு 55வது படைப்பிரிவின் தளபதி  மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரட்ணவும் சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலர் ஆ.சிறியும், கௌரவ விருந்தினர்களாக  பருத்தித்துறை உதவி பொலீஸ் அத்தியட்சகர், பருத்தித்துறை பொது வைத்தியசாலை மருத்துவர் உமாசுதன், வன்னி எயிட் ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், பருத்தித்துறை பொலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சேந்தன், மற்றும் 551 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் யூட் காரிய கரவண, மற்றும்  இராணுவ அதிகாரிகள் கிராம சேவகர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement