• Dec 01 2024

ஆற்றில் 200 பேருடன் கவிழ்ந்த படகு- 27 பேர் பரிதாபமாக உயிரிழப்பு- அதிகமானோர் மாயம்!

Tamil nila / Dec 1st 2024, 7:35 am
image

நைஜீரியாவில் உள்ள நைஜர் ஆற்றில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோகி மாநிலத்திலிருந்து அண்டை மாநிலமான நைஜர் நோக்கி 200-க்கும் அதிகமானோருடன் பயணித்த படகு கவிழ்ந்ததும் அதில் இருந்த பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். 

தகவலறிந்து உள்ளூரைச் சேர்ந்த டைவிங் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

பேரிடர் மேலாண்மை நிறுவன மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீட்பு பணியின்போது 27 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் என்றும், மாயமான 100 பேரின் நிலை என்ன என்றும் தெரியவில்லை.

மாயமானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் எனவும் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறு வருகின்ற நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணையில், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்திருக்கலாம் என தெரிய வந்தது. 

ஆற்றில் 200 பேருடன் கவிழ்ந்த படகு- 27 பேர் பரிதாபமாக உயிரிழப்பு- அதிகமானோர் மாயம் நைஜீரியாவில் உள்ள நைஜர் ஆற்றில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கோகி மாநிலத்திலிருந்து அண்டை மாநிலமான நைஜர் நோக்கி 200-க்கும் அதிகமானோருடன் பயணித்த படகு கவிழ்ந்ததும் அதில் இருந்த பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். தகவலறிந்து உள்ளூரைச் சேர்ந்த டைவிங் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.பேரிடர் மேலாண்மை நிறுவன மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், மீட்பு பணியின்போது 27 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் என்றும், மாயமான 100 பேரின் நிலை என்ன என்றும் தெரியவில்லை.மாயமானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் எனவும் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறு வருகின்ற நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.விபத்து தொடர்பான விசாரணையில், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்திருக்கலாம் என தெரிய வந்தது. 

Advertisement

Advertisement

Advertisement