• Dec 01 2024

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம் - மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Chithra / Dec 1st 2024, 7:38 am
image

 

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று இரவு 9 மணியளவில், சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதற்கமைய இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோணமலை, அம்பலாங்கொடை, தம்புள்ளை, காலி, நீர்கொழும்பு, புத்தளம், மஹியங்கனை, குருநாகல் மற்றும் கலாவெவ ஆகிய பிரதேசங்களிலேயே காற்றின் தரம் இவ்வாறு ஆரோக்கிமற்ற நிலையில் காணப்பட்டுள்ளது.

காற்றின் தரக் குறியீட்டின்படி, 0 முதல் 50 நல்லது, மற்றும் 51 முதல் 100 மிதமானது. 

அத்துடன், 101 முதல் 150  சிறிது சாதகமற்றது என்பதோடு 151 முதல் 200 என்பது மிகவும் சாதகமற்ற நிலைமையாகும்.

இதேவேளை 201 முதல் 300 க்கு இடையே காற்றின் தரம் காணப்படுமாயின் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதோடு, அந்த எண்ணிக்கை 301 முதல் 500ஆக காணப்படுமாயின் அது ஆபத்தானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காற்றின் ஆரோக்கியமற்ற நிலை காரணமாக, உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம் - மக்களுக்கு அவசர எச்சரிக்கை  நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நேற்று இரவு 9 மணியளவில், சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.அதற்கமைய இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோணமலை, அம்பலாங்கொடை, தம்புள்ளை, காலி, நீர்கொழும்பு, புத்தளம், மஹியங்கனை, குருநாகல் மற்றும் கலாவெவ ஆகிய பிரதேசங்களிலேயே காற்றின் தரம் இவ்வாறு ஆரோக்கிமற்ற நிலையில் காணப்பட்டுள்ளது.காற்றின் தரக் குறியீட்டின்படி, 0 முதல் 50 நல்லது, மற்றும் 51 முதல் 100 மிதமானது. அத்துடன், 101 முதல் 150  சிறிது சாதகமற்றது என்பதோடு 151 முதல் 200 என்பது மிகவும் சாதகமற்ற நிலைமையாகும்.இதேவேளை 201 முதல் 300 க்கு இடையே காற்றின் தரம் காணப்படுமாயின் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதோடு, அந்த எண்ணிக்கை 301 முதல் 500ஆக காணப்படுமாயின் அது ஆபத்தானது என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் காற்றின் ஆரோக்கியமற்ற நிலை காரணமாக, உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement