ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த தேர்தலை எதிர்கொள்ள கட்சிப் பொறிமுறையை பலப்படுத்த வேண்டும் என்பதால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே பல கருத்துக்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், கட்சிக்களின் மறுசீரமைப்பிற்காக இந்த பதவி மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர் அரசியல் கட்சிகளின் குறைபாடுகளை மீளாய்வு செய்வதற்காக விசேட குழுக்களை நியமிக்க அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு பணிகள் மிக விரைவில் தொடங்கும் என அக்கட்சியின் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கட்சிகளின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய அரசியல் கட்சிகளின் தலைமை பதவிகளில் மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அடுத்த தேர்தலை எதிர்கொள்ள கட்சிப் பொறிமுறையை பலப்படுத்த வேண்டும் என்பதால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே பல கருத்துக்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.இந்த நிலையில், கட்சிக்களின் மறுசீரமைப்பிற்காக இந்த பதவி மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, எதிர் அரசியல் கட்சிகளின் குறைபாடுகளை மீளாய்வு செய்வதற்காக விசேட குழுக்களை நியமிக்க அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு பணிகள் மிக விரைவில் தொடங்கும் என அக்கட்சியின் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.இதேவேளை, கட்சிகளின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.