• Jan 25 2025

இந்தியா - வாரணாசி தொடருந்து நிலையத்தில் தீ விபத்து - 200 வாகனங்கள் தீக்கிரை!

Tamil nila / Dec 1st 2024, 7:51 am
image

இந்தியா - வாரணாசி தொடருந்து நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 200 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.

 வாரணாசியின் கான்ட் தொடருந்து நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில்  இந்த தீ விபத்து ஏற்பட்டது. 

 தீயை அணைக்கும் பணியில் 12 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினரும், காவல்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர். 

 எனினும் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 மின்னொழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், தொடருந்து நிலையத்தின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா - வாரணாசி தொடருந்து நிலையத்தில் தீ விபத்து - 200 வாகனங்கள் தீக்கிரை இந்தியா - வாரணாசி தொடருந்து நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 200 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. வாரணாசியின் கான்ட் தொடருந்து நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில்  இந்த தீ விபத்து ஏற்பட்டது.  தீயை அணைக்கும் பணியில் 12 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினரும், காவல்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர்.  எனினும் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  மின்னொழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், தொடருந்து நிலையத்தின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement