தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஃபெங்கல் புயல், நேற்று காலை 11.30 மணியளவில் வட தமிழகம் - புதுச்சேரி கரையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 3 மணி நேரத்தில் மெதுவாக மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும், நாட்டின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் மேலும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு மாகாணத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும்.
ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது 50-55 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
மழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவிற்குள் நுழைந்த ஃபெங்கல் புயல் - இலங்கையில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஃபெங்கல் புயல், நேற்று காலை 11.30 மணியளவில் வட தமிழகம் - புதுச்சேரி கரையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 3 மணி நேரத்தில் மெதுவாக மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும், நாட்டின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் மேலும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு மாகாணத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும். ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது 50-55 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். மழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.