• Oct 19 2024

மட்டக்களப்பு கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! samugammedia

Tamil nila / Apr 16th 2023, 4:19 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் உள்ள வாவிப்பகுதியில் முதலைகளினால் பிடிக்கப்பட்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் அப்பகுதி மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக அச்சத்துடனேயே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மீன்வர்கள் தெரிவிக்கின்றனர்.

மீட்கப்பட்ட சடலம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதியைசேர்ந்த அமரசிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 49) 3 பிள்ளைகளின் தந்தையென உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவிக்கு மீன்பிடிக்காக சென்றவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.

இன்று காலை தன்னாமுனையில் உள்ள மட்டக்களப்பு வாவிக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் முதலைகள் இரண்டு சடலம் ஒன்றை இழுத்துச்செல்வதை அவதானித்து அவற்றினை அதனிடமிருந்து மீட்டுள்ளனர்.

மீட்ட சடலம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சடலம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் உறவினர்களினால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த ஏறாவூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பு கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு samugammedia மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் உள்ள வாவிப்பகுதியில் முதலைகளினால் பிடிக்கப்பட்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் அப்பகுதி மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக அச்சத்துடனேயே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மீன்வர்கள் தெரிவிக்கின்றனர்.மீட்கப்பட்ட சடலம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதியைசேர்ந்த அமரசிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 49) 3 பிள்ளைகளின் தந்தையென உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவிக்கு மீன்பிடிக்காக சென்றவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.இன்று காலை தன்னாமுனையில் உள்ள மட்டக்களப்பு வாவிக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் முதலைகள் இரண்டு சடலம் ஒன்றை இழுத்துச்செல்வதை அவதானித்து அவற்றினை அதனிடமிருந்து மீட்டுள்ளனர்.மீட்ட சடலம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சடலம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் உறவினர்களினால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வந்த ஏறாவூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement