• Nov 20 2024

மன்னாரில் பிரசவத்தின்போது உயிரிழந்த இளம் தாயும், சேயும்! யாழிற்கு அனுப்பப்பட்ட உடல்

Chithra / Nov 20th 2024, 10:44 am
image


மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாயின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேனுஜா திருமணமாகி 10 வருடங்கள் பிள்ளை இல்லாத நிலையில் நேற்றைய தினம் பிரசவத்திற்காக மன்னார் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது பிள்ளையும் தாயும் மரணமடைந்துள்ளனர்.

இந் நிலையில் உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஒன்றினைந்து மகப்பேற்று விடுதியில் போராட்டம் நடத்திய நிலையில் வைத்தியசாலையில் பதட்டமான நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி இறந்த தாயின் சடலத்தை பிரதே பரிசோதனைக்காகவும்,

மேலதிக விசாரணைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

மன்னாரில் பிரசவத்தின்போது உயிரிழந்த இளம் தாயும், சேயும் யாழிற்கு அனுப்பப்பட்ட உடல் மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாயின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுமன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேனுஜா திருமணமாகி 10 வருடங்கள் பிள்ளை இல்லாத நிலையில் நேற்றைய தினம் பிரசவத்திற்காக மன்னார் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது பிள்ளையும் தாயும் மரணமடைந்துள்ளனர்.இந் நிலையில் உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஒன்றினைந்து மகப்பேற்று விடுதியில் போராட்டம் நடத்திய நிலையில் வைத்தியசாலையில் பதட்டமான நிலை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி இறந்த தாயின் சடலத்தை பிரதே பரிசோதனைக்காகவும்,மேலதிக விசாரணைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement