நியூயோர்க்கில் இருந்து டெல்லி நோக்கி பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் பாதுகாப்புக் காரணத்தால் நேற்று (23) ரோம் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது.
வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸின் போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானம் ரோம் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல்களின் படி, விமானம் காஸ்பியன் கடலுக்கு மேல் இருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் குறித்து பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து இத்தாலிய விமானப்படை போர் விமானங்கள், விமானத்தை ரோம் நகருக்கு அழைத்துச் சென்றன, அங்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று இத்தாலிய தலைநகரில் உள்ள அதிகாரிகள் ஏபிசி செய்தியிடம் தெரிவித்தனர்.
199 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் பயணித்த விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோமின் லியோனார்டோ டா வின்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சட்ட அமுலாக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் பின்னர் விமானம் 15 மணிநேர தாமதமாக டெல்லி நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
விமானம் டெல்லியில் தரையிறங்குவதற்கு முன் நெறிமுறையின்படி ஒரு ஆய்வுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
வெடி குண்டு அச்சுறுத்தல் - பாதுகாப்பாக ரோமுக்கு அழைத்து செல்லப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நியூயோர்க்கில் இருந்து டெல்லி நோக்கி பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் பாதுகாப்புக் காரணத்தால் நேற்று (23) ரோம் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது.வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸின் போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானம் ரோம் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தகவல்களின் படி, விமானம் காஸ்பியன் கடலுக்கு மேல் இருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் குறித்து பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து இத்தாலிய விமானப்படை போர் விமானங்கள், விமானத்தை ரோம் நகருக்கு அழைத்துச் சென்றன, அங்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று இத்தாலிய தலைநகரில் உள்ள அதிகாரிகள் ஏபிசி செய்தியிடம் தெரிவித்தனர்.199 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் பயணித்த விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோமின் லியோனார்டோ டா வின்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.சட்ட அமுலாக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் பின்னர் விமானம் 15 மணிநேர தாமதமாக டெல்லி நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.விமானம் டெல்லியில் தரையிறங்குவதற்கு முன் நெறிமுறையின்படி ஒரு ஆய்வுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.