• Aug 17 2025

நல்லூருக்கு வெடிகுண்டு மிரட்டல்; அநாமதேய தொலைபேசி அழைப்பால் பரபரப்பு

Chithra / Aug 17th 2025, 7:38 am
image


யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த 

அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நேற்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர், மற்றும் காவல்துறையினர் ஆலய சூழலில் அதிகளவில் மோப்ப நாய் சகிதம் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா,

ஒரு விஷமியினால் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

நல்லூருக்கு வெடிகுண்டு மிரட்டல்; அநாமதேய தொலைபேசி அழைப்பால் பரபரப்பு யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.நேற்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர், மற்றும் காவல்துறையினர் ஆலய சூழலில் அதிகளவில் மோப்ப நாய் சகிதம் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா,ஒரு விஷமியினால் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement