• Jan 04 2025

பாக்கு மரத்திலிருந்து வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு!

Chithra / Jan 1st 2025, 3:10 pm
image

 

கேகாலை, மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்புலுகல பிரதேசத்தில் பாக்கு மரத்திலிருந்து கீழே தவறி வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (31) காலை இடம்பெற்றுள்ளது.

மாவனெல்லை,  அம்புலுகல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன், மற்றுமொரு சிறுவனுடன் இணைந்து பாக்கு மரத்தில் ஏறி பாக்குகளைப் பறிக்க முயன்ற போது கீழே தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காயமடைந்த சிறுவன் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாக்கு மரத்திலிருந்து வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு  கேகாலை, மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்புலுகல பிரதேசத்தில் பாக்கு மரத்திலிருந்து கீழே தவறி வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (31) காலை இடம்பெற்றுள்ளது.மாவனெல்லை,  அம்புலுகல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த சிறுவன், மற்றுமொரு சிறுவனுடன் இணைந்து பாக்கு மரத்தில் ஏறி பாக்குகளைப் பறிக்க முயன்ற போது கீழே தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து, காயமடைந்த சிறுவன் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement