• Apr 28 2024

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் மூளையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை : கல்லறையில் கண்டுப்பிடிக்கப்பட்ட மர்மம்! SamugamMedia

Tamil nila / Feb 28th 2023, 6:27 pm
image

Advertisement

இஸ்ரேலில் கி.மு. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டு சகோதரர்களின் கல்லறை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 


குறித்த கல்லறையை ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்கள், நம்பமுடியாத சில விடயங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். 


அதில் ஒன்றுதான் கண்டுப்பிடிக்கப்பட்ட இரு கல்லறை மனிதர்களில் ஒருவருக்கு மூளையில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது. குறித்த மனிதர் இறப்பதற்கு முன் மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 


இதன் ஆரம்ப வடிவமே கண்டறியப்பட்டுள்ளது. கண்டுப்பிடிக்கப்பட்ட மண்டை ஓட்டின் முன் எழும்பில், நான்கு வெட்டுக்கோடுகள் உள்ளன. அதனை கூர்மையான, வளைந்த முனை கருவியைக் கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 


அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயிரிழிந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 


இதேவேளை கண்டுப்பிடிக்கப்பட்ட வெண்கல கல்றையில் இருந்த இரு சகோதரர்களும் சமூகத்தின் உயர்வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதேநேரம் அவ்விருவரும் கடுமையான நோய் தாக்கங்களை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 


மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் மூளையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை : கல்லறையில் கண்டுப்பிடிக்கப்பட்ட மர்மம் SamugamMedia இஸ்ரேலில் கி.மு. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டு சகோதரர்களின் கல்லறை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கல்லறையை ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்கள், நம்பமுடியாத சில விடயங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். அதில் ஒன்றுதான் கண்டுப்பிடிக்கப்பட்ட இரு கல்லறை மனிதர்களில் ஒருவருக்கு மூளையில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது. குறித்த மனிதர் இறப்பதற்கு முன் மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் ஆரம்ப வடிவமே கண்டறியப்பட்டுள்ளது. கண்டுப்பிடிக்கப்பட்ட மண்டை ஓட்டின் முன் எழும்பில், நான்கு வெட்டுக்கோடுகள் உள்ளன. அதனை கூர்மையான, வளைந்த முனை கருவியைக் கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயிரிழிந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இதேவேளை கண்டுப்பிடிக்கப்பட்ட வெண்கல கல்றையில் இருந்த இரு சகோதரர்களும் சமூகத்தின் உயர்வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதேநேரம் அவ்விருவரும் கடுமையான நோய் தாக்கங்களை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement