• May 13 2024

காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்காதே - முத்து நகரில் மக்கள் போராட்டம்!

Tharun / Apr 28th 2024, 5:57 pm
image

Advertisement

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (28) இடம் பெற்றது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 


1972ம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில்  அப்போதைய பிரதியமைச்சராக செயற்பட்ட  மறைந்த மர்ஹூம் ஏ எல் அப்துல் மஜீத் அவர்களால் முத்து நகர் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட பட்டது 1984ல் இலங்கை துறை முக அதிகார சபைக்கு  ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் போது துறை முக அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலி அவர்களால் வர்த்தமாணி அறிவித்தல் விடுக்கப்பட்டது ஆனால் அம் மக்களுக்கு இது வரை காணி உரித்துப் பத்திரப் வழங்கப்படவில்லை எனவும் துறை முக அதிகார சபையினர் தங்களை தொடர்ந்தும் அச்சுறுத்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். 


தற்போது இங்கு மூன்று விவசாய குளங்கள் காணப்படுகிறது சுமார் 788 விவசாய நிலங்களும் காணப்படுகிறது 200 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அன்ளாட ஜூவனோபாயமாக விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர் துறை முக அதிகார சபையினர் எங்கள் காணியை பெற்று இந்தியாவுக்கு தாரை வார்க்க பார்க்கின்றனர் இதனை அரசாங்கம் நிறுத்தி ஜனாதிபதி எங்களுக்காண காணிகளுக்கான உரித்து படிவங்களை வழங்க வேண்டும் விவசாய குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். 


விற்காதே விற்காதே காணிகளை விற்காதே,விவசாய நிலங்களை மீட்டுத் தா, நாட்டின் புதுகெழும்பு விவசாயம், துறை முக அதிகார சபையே விவசாய காணிகளை அபகரிக்காதே, 1972ல் இருந்து விவசாய அநாதைகளாக நிர்க்கதியாக இருக்கிறோம் காணி உரித்து வடிவங்களை வழங்கு போன்ற வாசகங்களை உள்ளடக்கிய வகையில் பதாகைகளை ஏந்தியவாறு குறித்த முத்து நகர் விவசாய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் சுமார் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்காதே - முத்து நகரில் மக்கள் போராட்டம் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (28) இடம் பெற்றது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 1972ம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில்  அப்போதைய பிரதியமைச்சராக செயற்பட்ட  மறைந்த மர்ஹூம் ஏ எல் அப்துல் மஜீத் அவர்களால் முத்து நகர் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட பட்டது 1984ல் இலங்கை துறை முக அதிகார சபைக்கு  ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் போது துறை முக அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலி அவர்களால் வர்த்தமாணி அறிவித்தல் விடுக்கப்பட்டது ஆனால் அம் மக்களுக்கு இது வரை காணி உரித்துப் பத்திரப் வழங்கப்படவில்லை எனவும் துறை முக அதிகார சபையினர் தங்களை தொடர்ந்தும் அச்சுறுத்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இங்கு மூன்று விவசாய குளங்கள் காணப்படுகிறது சுமார் 788 விவசாய நிலங்களும் காணப்படுகிறது 200 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அன்ளாட ஜூவனோபாயமாக விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர் துறை முக அதிகார சபையினர் எங்கள் காணியை பெற்று இந்தியாவுக்கு தாரை வார்க்க பார்க்கின்றனர் இதனை அரசாங்கம் நிறுத்தி ஜனாதிபதி எங்களுக்காண காணிகளுக்கான உரித்து படிவங்களை வழங்க வேண்டும் விவசாய குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். விற்காதே விற்காதே காணிகளை விற்காதே,விவசாய நிலங்களை மீட்டுத் தா, நாட்டின் புதுகெழும்பு விவசாயம், துறை முக அதிகார சபையே விவசாய காணிகளை அபகரிக்காதே, 1972ல் இருந்து விவசாய அநாதைகளாக நிர்க்கதியாக இருக்கிறோம் காணி உரித்து வடிவங்களை வழங்கு போன்ற வாசகங்களை உள்ளடக்கிய வகையில் பதாகைகளை ஏந்தியவாறு குறித்த முத்து நகர் விவசாய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement