• Apr 28 2024

கருங்கடலில் பறந்த பிரிட்டிஷ் போர் விமானங்கள்..!இடைமறித்த ரஷ்யா..!samugammedia

Sharmi / Jun 27th 2023, 11:26 am
image

Advertisement

கருங்கடல் பகுதியில் பறந்த இங்கிலாந்தின் இரண்டு போர் விமானங்களை ரஷ்ய  விமானங்கள் தடுத்து நிறுத்தியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் ஒன்றரை ஆண்டுகளை கடந்து இடம்பெற்று வரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகள் போன்றன உக்ரைனுக்கு ஆதரவாக  ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், கருங்கடல் பகுதியில் பறந்த இங்கிலாந்தின் இரண்டு போர் விமானங்களை ரஷ்ய  விமானங்கள் தடுத்து நிறுத்தியுள்ளன.

அந்த வகையில், ரஷ்ய போர் விமானங்கள் நெருங்கி சென்ற பொழுது, வெளிநாட்டு போர் விமானங்கள் திரும்பி ரஷ்ய எல்லையில் இருந்து விலகிவிட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு  அமைச்சகம்  அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட விமானங்கள் RC-135 உளவு விமானத்துடன் இரண்டு பிரிட்டிஷ் டைபூன் ஜெட் விமானங்கள் என்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

அத்துடன், ரஷ்ய விமானங்கள் பாதுகாப்பாக தங்கள் விமான நிலையத்திற்குத் திரும்பியதாகவும்,  ரஷ்ய எல்லையில் எந்த அத்துமீறலும்  இடம்பெறவில்லை எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இங்கிலாந்து தரப்பில் இருந்து , இது சர்வதேச வான்பரப்பில் வாடிக்கையாக  நடக்கும் நிகழ்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருங்கடலில் பறந்த பிரிட்டிஷ் போர் விமானங்கள்.இடைமறித்த ரஷ்யா.samugammedia கருங்கடல் பகுதியில் பறந்த இங்கிலாந்தின் இரண்டு போர் விமானங்களை ரஷ்ய  விமானங்கள் தடுத்து நிறுத்தியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் ஒன்றரை ஆண்டுகளை கடந்து இடம்பெற்று வரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகள் போன்றன உக்ரைனுக்கு ஆதரவாக  ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், கருங்கடல் பகுதியில் பறந்த இங்கிலாந்தின் இரண்டு போர் விமானங்களை ரஷ்ய  விமானங்கள் தடுத்து நிறுத்தியுள்ளன. அந்த வகையில், ரஷ்ய போர் விமானங்கள் நெருங்கி சென்ற பொழுது, வெளிநாட்டு போர் விமானங்கள் திரும்பி ரஷ்ய எல்லையில் இருந்து விலகிவிட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு  அமைச்சகம்  அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட விமானங்கள் RC-135 உளவு விமானத்துடன் இரண்டு பிரிட்டிஷ் டைபூன் ஜெட் விமானங்கள் என்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அத்துடன், ரஷ்ய விமானங்கள் பாதுகாப்பாக தங்கள் விமான நிலையத்திற்குத் திரும்பியதாகவும்,  ரஷ்ய எல்லையில் எந்த அத்துமீறலும்  இடம்பெறவில்லை எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இங்கிலாந்து தரப்பில் இருந்து , இது சர்வதேச வான்பரப்பில் வாடிக்கையாக  நடக்கும் நிகழ்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement