தெஹிவளை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 9 பெண்கள் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்மலானை, மஹரகம, தெஹிவளை மற்றும் மொரட்டுவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 மற்றும் 51 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தெஹிவளையில் விபச்சார விடுதி; அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய 9 பெண்கள் தெஹிவளை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 9 பெண்கள் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்மலானை, மஹரகம, தெஹிவளை மற்றும் மொரட்டுவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 மற்றும் 51 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.