வவுனியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் பிரச்சாரக் கூட்டத்தில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மத குருமார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டனியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின் பிரதான மேடையில் மதத்தலைவர்ககளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டு அவர்களும் அமர்ந்திருந்தனர்.
குறித்த பொதுக் கூட்டத்தில் மூவினங்களையும் சேர்ந்த நான்கு மதங்களையும் சேர்ந்த மக்கள் கலந்து கொண்ட போதும் பௌத்த மதகுரு, இந்து மதகுரு, கிறிஸ்தவ மதகுரு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்கள் எவரும் பிரதான மேடையில் காணப்படவில்லை. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 6 மௌலவிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மதத்தலைவர்கள் அமரும் இடத்தில் இருந்ததுடன், ஒரு மௌலவி உரையாற்றியும் இருந்தார்.
ஆனால் ஏனைய மதத் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என அங்கு கலந்து கொண்டு ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வவுனியாவில் சஜித்தின் பிரச்சாரக் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதத்தலைவர்கள் வவுனியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் பிரச்சாரக் கூட்டத்தில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மத குருமார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.ஐக்கிய மக்கள் கூட்டனியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.குறித்த கூட்டத்தின் பிரதான மேடையில் மதத்தலைவர்ககளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டு அவர்களும் அமர்ந்திருந்தனர்.குறித்த பொதுக் கூட்டத்தில் மூவினங்களையும் சேர்ந்த நான்கு மதங்களையும் சேர்ந்த மக்கள் கலந்து கொண்ட போதும் பௌத்த மதகுரு, இந்து மதகுரு, கிறிஸ்தவ மதகுரு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்கள் எவரும் பிரதான மேடையில் காணப்படவில்லை. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 6 மௌலவிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மதத்தலைவர்கள் அமரும் இடத்தில் இருந்ததுடன், ஒரு மௌலவி உரையாற்றியும் இருந்தார்.ஆனால் ஏனைய மதத் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என அங்கு கலந்து கொண்டு ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.