ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலக்கியவர்களில் முற்போக்கான தலைவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு கதவு திறந்தே உள்ளது என்று அக் கட்சியின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
" ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த சுதந்திர கட்சி உறுப்பினரான ஷான் வியலால் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சியுடன் கூட்டணியாக போட்டியிட்டார். எனவே அவர் எதிரணிக்கு சென்றதால் எமக்கு தாக்கம் அல்ல.
எது எப்படி இருந்தாலும் எமது கட்சிக்கு எதிராக கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட ஹெலிகொப்டர் கூட்டணி போன்ற பல கூட்டணிகள் தற்போது உடைந்து வருகின்றன. எனவே எம்மோடு இணைந்து பயணிப்பதற்கான சந்தர்ப்பம் அவ்வாறே இருப்பதால் வெளியேறிய முற்போக்கு தலைவர்களுக்கு நாம் மீண்டும் அழைப்பு விடுகின்றோம். வற் வரி அதிகரிப்பில் எமக்கு பிரச்னை இருப்பதோடு கட்சி என்ற ரீதியில் நாம் அதற்கு இணங்கவில்லை " என்றும் தெரிவித்துளளார்.
இதேவேளை போலி போராட்டங்கள், பிரச்சாரங்கள் மூலம் அந்நிய செலாவணி தடுக்கப்பட்டதோடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் தடுக்கப்பட்டது. இதனை செய்தவர்களே இன்று வற் வரி அதிகரிப்பிற்கு எதிராக கதைக்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைவிட்டு சென்ற பங்காளிகளை கூட்டு சேர மொட்டுக்கட்சி மீண்டும் அழைப்பு.samugammedia ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலக்கியவர்களில் முற்போக்கான தலைவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு கதவு திறந்தே உள்ளது என்று அக் கட்சியின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், " ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த சுதந்திர கட்சி உறுப்பினரான ஷான் வியலால் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சியுடன் கூட்டணியாக போட்டியிட்டார். எனவே அவர் எதிரணிக்கு சென்றதால் எமக்கு தாக்கம் அல்ல. எது எப்படி இருந்தாலும் எமது கட்சிக்கு எதிராக கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட ஹெலிகொப்டர் கூட்டணி போன்ற பல கூட்டணிகள் தற்போது உடைந்து வருகின்றன. எனவே எம்மோடு இணைந்து பயணிப்பதற்கான சந்தர்ப்பம் அவ்வாறே இருப்பதால் வெளியேறிய முற்போக்கு தலைவர்களுக்கு நாம் மீண்டும் அழைப்பு விடுகின்றோம். வற் வரி அதிகரிப்பில் எமக்கு பிரச்னை இருப்பதோடு கட்சி என்ற ரீதியில் நாம் அதற்கு இணங்கவில்லை " என்றும் தெரிவித்துளளார். இதேவேளை போலி போராட்டங்கள், பிரச்சாரங்கள் மூலம் அந்நிய செலாவணி தடுக்கப்பட்டதோடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் தடுக்கப்பட்டது. இதனை செய்தவர்களே இன்று வற் வரி அதிகரிப்பிற்கு எதிராக கதைக்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.