ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கையைப் பாதுகாக்கும் ஒருவரே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்தக் கூற்றின் மூலம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது என்று நாமல் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் என உணர முடிகின்றது.
மொட்டுக் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் ஏனைய கட்சிகளுடனும் இணைந்தவர்கள் தமக்குத் தேவையில்லை என்றும், அவர்களுடன் கூட்டணி ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஊடகங்களிடம் மேலும் கூறினார்.
ரணிலுக்கு மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது - மறைமுகமாகத் தெரிவித்தார் நாமல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கையைப் பாதுகாக்கும் ஒருவரே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.இந்தக் கூற்றின் மூலம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது என்று நாமல் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் என உணர முடிகின்றது.மொட்டுக் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் ஏனைய கட்சிகளுடனும் இணைந்தவர்கள் தமக்குத் தேவையில்லை என்றும், அவர்களுடன் கூட்டணி ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஊடகங்களிடம் மேலும் கூறினார்.