• Mar 10 2025

பண்டாரவளையில் பஸ் விபத்து - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

Chithra / Mar 7th 2025, 10:59 am
image

 பண்டாரவளை பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் பண்டாரவளை பகுதிக்கு சொந்தமான பேருந்து இன்று காலை நெலுவ செஞ்ஜோமிஸ் கீழ் பகுதியில் விபத்துக்குள்ளாகியது. 

நெருக்கமான வளைவுகளும் பாரிய பள்ளதாக்கையும் உடைய குறித்த பகுதியூடாக பயணிக்கையில் பஸ்ஸின் சக்கரத்தில் ஏற்பட்ட முறிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

குறித்த பஸ் பண்டாரவளை - நெலுவ ஊடாக பதுளைக்கு பயணிகள் சேவையை முன்னெடுத்து வரும் நிலையில் இன்று காலை பல்லேவல மாலிகாத்தன்ன நெலுவ ஊடாக பதுளை நோக்கி பயணித்த வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர்கள், வேலைக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் இதன்போது மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இவ்வாறான ஆபத்தான் வீதியில் பயணிக்கும் பஸ்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டாரவளையில் பஸ் விபத்து - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்  பண்டாரவளை பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபையின் பண்டாரவளை பகுதிக்கு சொந்தமான பேருந்து இன்று காலை நெலுவ செஞ்ஜோமிஸ் கீழ் பகுதியில் விபத்துக்குள்ளாகியது. நெருக்கமான வளைவுகளும் பாரிய பள்ளதாக்கையும் உடைய குறித்த பகுதியூடாக பயணிக்கையில் பஸ்ஸின் சக்கரத்தில் ஏற்பட்ட முறிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பஸ் பண்டாரவளை - நெலுவ ஊடாக பதுளைக்கு பயணிகள் சேவையை முன்னெடுத்து வரும் நிலையில் இன்று காலை பல்லேவல மாலிகாத்தன்ன நெலுவ ஊடாக பதுளை நோக்கி பயணித்த வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர்கள், வேலைக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் இதன்போது மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.இவ்வாறான ஆபத்தான் வீதியில் பயணிக்கும் பஸ்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement