• Sep 20 2024

ஊழல் வாதிகளின் அனுசரணையில் பதவி ஏறிய ரணிலால் சிங்கப்பூர் பிரதமரை போன்று செய்ய முடியுமா - ரஞ்சன் கேள்வி!

Tamil nila / Feb 12th 2023, 4:59 pm
image

Advertisement

சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவின் பாதையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்பற்ற வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஊடகங்கள ஊடாக நேற்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.


லீ குவான் யூ தனக்கு ஆதரவான பாதாள உலகக் குழுக்களுக்குச் செய்ததைப் போன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் செய்ய வேண்டும் என்றும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


பல்வேறு ஊழல்கள் மூலம் இலங்கையை அழித்த திருடர்கள் குழுவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க 

திருடர்கள் குழு தமது பாதுகாப்பிற்காக ரணில் விக்கிரமசிங்கவை மெய்ப்பாதுகாவலராக அழைத்து வந்துள்ளதாக குறிப்பிட்டார்.


இதேபோன்று ரெட் டிராகன் மற்றும் பிளாக் டிராகன் என்ற இரண்டு மாஃபியா பாதாள உலகக் குழுக்களின் ஆதரவுடன் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ தேர்ந்தெடுக்கப்பட்டார். 


அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் அவருக்கு ஆதரவாக இருந்த மாஃபியா குழு தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 

அவரது வழியில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட வேண்டும் . 


ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு செய்வது சந்தேகத்திற்குரியது என்றும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


ஊழல் வாதிகளின் அனுசரணையில் பதவி ஏறிய ரணிலால் சிங்கப்பூர் பிரதமரை போன்று செய்ய முடியுமா - ரஞ்சன் கேள்வி சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவின் பாதையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்பற்ற வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஊடகங்கள ஊடாக நேற்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.லீ குவான் யூ தனக்கு ஆதரவான பாதாள உலகக் குழுக்களுக்குச் செய்ததைப் போன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் செய்ய வேண்டும் என்றும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.பல்வேறு ஊழல்கள் மூலம் இலங்கையை அழித்த திருடர்கள் குழுவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க திருடர்கள் குழு தமது பாதுகாப்பிற்காக ரணில் விக்கிரமசிங்கவை மெய்ப்பாதுகாவலராக அழைத்து வந்துள்ளதாக குறிப்பிட்டார்.இதேபோன்று ரெட் டிராகன் மற்றும் பிளாக் டிராகன் என்ற இரண்டு மாஃபியா பாதாள உலகக் குழுக்களின் ஆதரவுடன் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் அவருக்கு ஆதரவாக இருந்த மாஃபியா குழு தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். அவரது வழியில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட வேண்டும் . ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு செய்வது சந்தேகத்திற்குரியது என்றும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement