• Dec 04 2024

கல்விக்கான விசேட விரைவு விசாத் திட்டத்தை இரத்து செய்த கனடா!

Tharmini / Nov 10th 2024, 2:27 pm
image

இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையிலான இராஜதந்திர மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில்,

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் எஸ்.டி.எஸ் என்ற பிரபலமான கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு கனடாவில் உயர் படிப்புக்கான விசாக்களை விரைவாகப் பெற அனுமதிக்கும் இந்த விசா திட்டத்தின் நிறுத்தமானது இந்தியா உட்பட சர்வதேசத்திலுள்ள மாணவர்கள் மீது கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான விசா விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் வகையில் கனேடிய அரசாங்கத்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எஸ்.டி.எஸ் விசா திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வரை 3 இலட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் பயனடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, கனடாவில் 4,27,000 இந்திய மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கல்விக்கான விசேட விரைவு விசாத் திட்டத்தை இரத்து செய்த கனடா இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையிலான இராஜதந்திர மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் எஸ்.டி.எஸ் என்ற பிரபலமான கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தியுள்ளது.ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு கனடாவில் உயர் படிப்புக்கான விசாக்களை விரைவாகப் பெற அனுமதிக்கும் இந்த விசா திட்டத்தின் நிறுத்தமானது இந்தியா உட்பட சர்வதேசத்திலுள்ள மாணவர்கள் மீது கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான விசா விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் வகையில் கனேடிய அரசாங்கத்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எஸ்.டி.எஸ் விசா திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தின் மூலமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வரை 3 இலட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் பயனடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, கனடாவில் 4,27,000 இந்திய மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement