• Dec 14 2024

கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகின்றதா - சுரேன் சந்திரா

Tharmini / Nov 10th 2024, 2:45 pm
image

இலங்கையின் அனைத்து மக்களின் இன நல்லுறவுக்காக பாடுபடும் வீ ஆர் வன் (We are One) அமைப்பின் தலைவர் சுரேன் சந்திரா,

இன்று (10) கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு, கொழும்பு வாழ் தமிழ் மக்களின் பாராளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவம் எவ்வாறு அமையப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், கொழும்பை பொறுத்தமட்டில் ஒரே ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக மனோ கணேசன் அவர்களையே மக்கள் கடந்த காலங்களில் தெரிவு செய்து வருகிறார்கள்.

ஆயினும் இரண்டு தமிழர்களையாவது கொழும்பு மாவட்ட மக்கள் சார்பில் பாராளுமன்றம் அனுப்ப சந்தர்ப்பம் இருந்தும் திட்டவட்டமாகவே மனோ கணேசன் தனிப் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு முனைவது தமிழர்களுக்கு செய்யும் பெரும் துரோகம் ஆகும் என்றார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஒரு நல்ல உதாரணம் "மனோ கணேசன் அவர்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்றார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்றார் என்கின்ற ஒரே ஒரு காரணத்துக்காக கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அவரை தொடர்ச்சியாக பாராளுமன்றம் அனுப்பிக்கொண்டே இருக்கின்றார்கள். 

காரணம் ஒரு தமிழன் பாராளுமன்றத்தில் பதிவு படுத்தவேண்டும் என்கின்ற ஒரு நல்ல நோக்கத்தில், ஆனால் இவர்கள் அந்த பாராளுமன்றத்திற்கு சென்று மக்களுக்கு என்ன செய்கின்றார்கள்? மக்கள் சேவைகளுக்காக என்றாவது  ஒருநாள் பாராளுமன்றத்தில் "மனோ கணேசன்"  கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்ததை நீங்கள் கண்டிருக்கின்றீர்களா..? அவர் ஏனையவர்களைப் போன்று பொதுவான பிரச்சினைகளைப் பற்றி மட்டும்தான் கதைப்பார். 

அதுவும் தனக்குத் தெரிந்த சிங்களத்தில் கதைத்து சிங்கள மக்களின் அபிமானத்தையும் பெற்றுக்கொள்ள விரும்புவார், இதற்காகவா நாங்கள் அவரை பாராளுமன்றம் அனுப்பினோம்..? உதாரணமாக தமிழர்கள் பெரும்பாலும் வாழும் கொழும்பு 09 - தெமட்டகொடை சமந்தா தோட்டத்தில் வருடத்திற்கு மூன்று முறை வெள்ளம் வருகின்றது. 

அந்த வெள்ளம் வருகின்ற ஒவ்வொரு தருணத்திலும் அங்குள்ள சுமார் 200 - 300-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீரால் நிரம்பி வழிகிறது, அந்த மக்கள் பெரும் அசௌகரியத்தை அவர்களுக்கு  ஏற்படுத்துகிறது. 

ஆனால் இங்கு மனோ கணேசன் ஒரு தடவையாவது இதற்கு தீர்வு தந்து இருப்பாரா? ஆகவே மக்கள் இம்முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 

தமிழர்களுக்கு உண்மையாக சேவை செய்கின்ற தமிழர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். 

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தலைவராக இருந்து கொண்டு  இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு வாக்களிக்கவும் என்று டீல் போடுகின்ற மனோ கணேசன் போன்றவர்களை பாராளுமன்றம் அனுப்பாது, உண்மையாக மக்கள் சேவை செய்தவர்களையும், மக்கள் சேவை செய்யத் தயாராக இருப்பவர்களை மட்டுமே பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றார்.

கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகின்றதா - சுரேன் சந்திரா இலங்கையின் அனைத்து மக்களின் இன நல்லுறவுக்காக பாடுபடும் வீ ஆர் வன் (We are One) அமைப்பின் தலைவர் சுரேன் சந்திரா, இன்று (10) கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு, கொழும்பு வாழ் தமிழ் மக்களின் பாராளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவம் எவ்வாறு அமையப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், கொழும்பை பொறுத்தமட்டில் ஒரே ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக மனோ கணேசன் அவர்களையே மக்கள் கடந்த காலங்களில் தெரிவு செய்து வருகிறார்கள்.ஆயினும் இரண்டு தமிழர்களையாவது கொழும்பு மாவட்ட மக்கள் சார்பில் பாராளுமன்றம் அனுப்ப சந்தர்ப்பம் இருந்தும் திட்டவட்டமாகவே மனோ கணேசன் தனிப் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு முனைவது தமிழர்களுக்கு செய்யும் பெரும் துரோகம் ஆகும் என்றார்.மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஒரு நல்ல உதாரணம் "மனோ கணேசன் அவர்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்றார்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்றார் என்கின்ற ஒரே ஒரு காரணத்துக்காக கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அவரை தொடர்ச்சியாக பாராளுமன்றம் அனுப்பிக்கொண்டே இருக்கின்றார்கள். காரணம் ஒரு தமிழன் பாராளுமன்றத்தில் பதிவு படுத்தவேண்டும் என்கின்ற ஒரு நல்ல நோக்கத்தில், ஆனால் இவர்கள் அந்த பாராளுமன்றத்திற்கு சென்று மக்களுக்கு என்ன செய்கின்றார்கள் மக்கள் சேவைகளுக்காக என்றாவது  ஒருநாள் பாராளுமன்றத்தில் "மனோ கணேசன்"  கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்ததை நீங்கள் கண்டிருக்கின்றீர்களா. அவர் ஏனையவர்களைப் போன்று பொதுவான பிரச்சினைகளைப் பற்றி மட்டும்தான் கதைப்பார். அதுவும் தனக்குத் தெரிந்த சிங்களத்தில் கதைத்து சிங்கள மக்களின் அபிமானத்தையும் பெற்றுக்கொள்ள விரும்புவார், இதற்காகவா நாங்கள் அவரை பாராளுமன்றம் அனுப்பினோம். உதாரணமாக தமிழர்கள் பெரும்பாலும் வாழும் கொழும்பு 09 - தெமட்டகொடை சமந்தா தோட்டத்தில் வருடத்திற்கு மூன்று முறை வெள்ளம் வருகின்றது. அந்த வெள்ளம் வருகின்ற ஒவ்வொரு தருணத்திலும் அங்குள்ள சுமார் 200 - 300-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீரால் நிரம்பி வழிகிறது, அந்த மக்கள் பெரும் அசௌகரியத்தை அவர்களுக்கு  ஏற்படுத்துகிறது. ஆனால் இங்கு மனோ கணேசன் ஒரு தடவையாவது இதற்கு தீர்வு தந்து இருப்பாரா ஆகவே மக்கள் இம்முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழர்களுக்கு உண்மையாக சேவை செய்கின்ற தமிழர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தலைவராக இருந்து கொண்டு  இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு வாக்களிக்கவும் என்று டீல் போடுகின்ற மனோ கணேசன் போன்றவர்களை பாராளுமன்றம் அனுப்பாது, உண்மையாக மக்கள் சேவை செய்தவர்களையும், மக்கள் சேவை செய்யத் தயாராக இருப்பவர்களை மட்டுமே பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement