கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற முறைகேடான நியமனத்தை இரத்து செய்து பொருத்தமான அதிபரை நியமிக்குமாறு இலங்கை சிவசேன அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை சிவசேன அமைப்பு இன்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடமாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சீன் செயலாளரால் 2025.03.04 ஆம் திகதியிடப்பட்ட கடிதப்பிரகாரம் வடமாகாணத்தின் 7 பாடசாலைகளுக்கு அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
அவற்றுள் கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரியும் ஒன்றாகும். குறித்த பாடசாலைக்கு அதிபர் தரம் Iஐ சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
அதிபர் தரம் Iஐ சேர்ந்தவர்கள் இருவரும், அதிபர் தரம் 2 ஐ சேர்ந்தவர்கள் இருவரும் அதிபர் தரம் IIIஐ சேர்ந்தவர்கள் இருவருமாக அறுவர் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் இருந்து விண்ணப்பித்து இருந்தனர்.
யாழ். கல்வி வலயத்தில் இருந்து யா/ ஸ்ரீ சோமஸ்கந்தா இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் தேவகுமார் உதயகலா மட்டும் விண்ணப்பித்திருந்தார்.
எனினும் தற்பொழுது கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ள, யாழ்/ நல்லூர் சென்பெனடிக் றோ. க. த. க. வித்தியாலய அதிபர் அருட்சகோதரி மரியவசந்தி யாழ் கல்வி வலயத்தில் இருந்து விண்ணப்பித்து இருந்தமைக்கான ஆதாரம் எதுவும் காணப்படவில்லை.
எனவே கபடத்தனமாகவும் செயலாளரினால் நிராகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள தரம் I, II அதிபர்களைக் கருத்திற்கொண்டு தகுதியான அதிபரை குறித்த பாடசாலைக்கு நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றோம். - என்றனர்.
முறைகேடான அதிபர் நியமனத்தை இரத்துச் செய்து பொருத்தமான அதிபரை நியமிக்குக - இலங்கை சிவசேன அமைப்பு கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற முறைகேடான நியமனத்தை இரத்து செய்து பொருத்தமான அதிபரை நியமிக்குமாறு இலங்கை சிவசேன அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை சிவசேன அமைப்பு இன்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடமாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சீன் செயலாளரால் 2025.03.04 ஆம் திகதியிடப்பட்ட கடிதப்பிரகாரம் வடமாகாணத்தின் 7 பாடசாலைகளுக்கு அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.அவற்றுள் கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரியும் ஒன்றாகும். குறித்த பாடசாலைக்கு அதிபர் தரம் Iஐ சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.அதிபர் தரம் Iஐ சேர்ந்தவர்கள் இருவரும், அதிபர் தரம் 2 ஐ சேர்ந்தவர்கள் இருவரும் அதிபர் தரம் IIIஐ சேர்ந்தவர்கள் இருவருமாக அறுவர் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் இருந்து விண்ணப்பித்து இருந்தனர். யாழ். கல்வி வலயத்தில் இருந்து யா/ ஸ்ரீ சோமஸ்கந்தா இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் தேவகுமார் உதயகலா மட்டும் விண்ணப்பித்திருந்தார். எனினும் தற்பொழுது கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ள, யாழ்/ நல்லூர் சென்பெனடிக் றோ. க. த. க. வித்தியாலய அதிபர் அருட்சகோதரி மரியவசந்தி யாழ் கல்வி வலயத்தில் இருந்து விண்ணப்பித்து இருந்தமைக்கான ஆதாரம் எதுவும் காணப்படவில்லை.எனவே கபடத்தனமாகவும் செயலாளரினால் நிராகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள தரம் I, II அதிபர்களைக் கருத்திற்கொண்டு தகுதியான அதிபரை குறித்த பாடசாலைக்கு நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றோம். - என்றனர்.