தேசிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் மூதூர் -சஹாயபுரம் கிராமத்தில் இன்று புதன்கிழமை (16) வீடுவீடாகச் சென்று மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் வீடு வீடாக சென்று நாங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றோம்.
செல்கின்ற இடங்களில் எமக்கான ஆதரவு பெருகி காணப்படுகிறது.காரணம் ஜனாதிபதி அவர்களுடைய செயற்பாடு மக்களுக்கு பிடித்துள்ளது.ஏற்கனவே நாங்கள் மாற்றுக் கட்சிக்கு வாக்களித்திருந்தோம் இம்முறை பொது தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்போம் என்று குறிப்பிடுகின்றனர்.
இனவாதம் மதவாதத்தை மக்கள் வெறுக்கின்றனர்.பாராளுமன்றத்தில் பல கோடிகளுக்கு கஜு சாப்பிட்டதை மக்கள் வெறுக்கின்றனர்.இன்று இனவாதம் தோற்கடிக்கப்பட்டு ஊழல் மோசடிகளை தோற்கடிப்பதற்காக மக்கள் ஒன்றுபட்டுள்ளனர்.இந்த ஒன்றிணைவானது பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் நிலைக்கு கொண்டு செல்லும். இன்று பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அவதானத்துடன் உள்ளனர்.இனவாத மதவாத ஊழல் அரசாங்கத்திற்கு மக்கள் சோரம் போவதற்கு தயாராக இல்லை எனவும் குறிப்பிட்டார்.
வேட்பாளரின்மக்கள் சந்திப்பு - எம்.கே.எம்.சப்றான் தேசிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் மூதூர் -சஹாயபுரம் கிராமத்தில் இன்று புதன்கிழமை (16) வீடுவீடாகச் சென்று மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் வீடு வீடாக சென்று நாங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றோம். செல்கின்ற இடங்களில் எமக்கான ஆதரவு பெருகி காணப்படுகிறது.காரணம் ஜனாதிபதி அவர்களுடைய செயற்பாடு மக்களுக்கு பிடித்துள்ளது.ஏற்கனவே நாங்கள் மாற்றுக் கட்சிக்கு வாக்களித்திருந்தோம் இம்முறை பொது தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்போம் என்று குறிப்பிடுகின்றனர்.இனவாதம் மதவாதத்தை மக்கள் வெறுக்கின்றனர்.பாராளுமன்றத்தில் பல கோடிகளுக்கு கஜு சாப்பிட்டதை மக்கள் வெறுக்கின்றனர்.இன்று இனவாதம் தோற்கடிக்கப்பட்டு ஊழல் மோசடிகளை தோற்கடிப்பதற்காக மக்கள் ஒன்றுபட்டுள்ளனர்.இந்த ஒன்றிணைவானது பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் நிலைக்கு கொண்டு செல்லும். இன்று பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அவதானத்துடன் உள்ளனர்.இனவாத மதவாத ஊழல் அரசாங்கத்திற்கு மக்கள் சோரம் போவதற்கு தயாராக இல்லை எனவும் குறிப்பிட்டார்.