• Apr 01 2025

தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்துவந்த 49 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாப் பொதிகள்!

Chithra / Mar 29th 2025, 1:21 pm
image

 

தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 இற்கு இடைப்பட்ட கடற்பரப்பில் மிதந்துகொண்டிருந்த சுமார் 124 கிலோ 392 கிராம் எடையுடைய கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல், தம்மென்னாவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு கப்பல் ரோந்து குழுவை நிலைநிறுத்தி நேற்று விசேட சோதனை நடிவடிக்கையை மேற்கொண்டது. 

இதன்போது கடலில் சந்தேகத்துக்கிடமான முறையில் மிதந்து கொண்டிருந்த 46 பொதிகளை அவதானித்து அதனை சோதனை செய்து பார்த்தபோதே இந்த கேரள கஞ்சா பொதிகள் சிக்கியுள்ளன.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 49 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்துவந்த 49 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாப் பொதிகள்  தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 இற்கு இடைப்பட்ட கடற்பரப்பில் மிதந்துகொண்டிருந்த சுமார் 124 கிலோ 392 கிராம் எடையுடைய கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல், தம்மென்னாவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு கப்பல் ரோந்து குழுவை நிலைநிறுத்தி நேற்று விசேட சோதனை நடிவடிக்கையை மேற்கொண்டது. இதன்போது கடலில் சந்தேகத்துக்கிடமான முறையில் மிதந்து கொண்டிருந்த 46 பொதிகளை அவதானித்து அதனை சோதனை செய்து பார்த்தபோதே இந்த கேரள கஞ்சா பொதிகள் சிக்கியுள்ளன.கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 49 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.மேலும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement