• Oct 19 2026

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரும் அநுரவால் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க முடியாதா? கம்மன்பில கேள்வி

Chithra / Oct 18th 2026, 10:47 am
image


அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பௌத்த பிக்குவான ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க மறுப்பது ஏன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.


ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அரசாங்கம் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பல்வேறு விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,


நாட்டுக்காகக் குரல் கொடுத்த ஞானசார தேரர் அரசியல் நோக்கங்களுக்காகவே பழிவாங்கப்பட்டுள்ளார். அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி பௌத்த பிக்குகள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இவ்வாறான நிலையில், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என அமைச்சர் லால் காந்த தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.


ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அமைச்சர் லால் காந்தவிடம் எவரும் பொதுமன்னிப்பு கோரவில்லை.


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனுக்காக அந்நாட்டு மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இலங்கையில் பௌத்த பிக்குவான ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க மறுப்பது ஏன்?


மேலும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தற்போது பொலிஸாரால் அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரும் அநுரவால் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க முடியாதா கம்மன்பில கேள்வி அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பௌத்த பிக்குவான ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க மறுப்பது ஏன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அரசாங்கம் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பல்வேறு விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,நாட்டுக்காகக் குரல் கொடுத்த ஞானசார தேரர் அரசியல் நோக்கங்களுக்காகவே பழிவாங்கப்பட்டுள்ளார். அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி பௌத்த பிக்குகள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறான நிலையில், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என அமைச்சர் லால் காந்த தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அமைச்சர் லால் காந்தவிடம் எவரும் பொதுமன்னிப்பு கோரவில்லை.சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனுக்காக அந்நாட்டு மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இலங்கையில் பௌத்த பிக்குவான ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க மறுப்பது ஏன்மேலும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தற்போது பொலிஸாரால் அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement