• Nov 26 2024

தேர்தல் திகதிக்கு எதிரான வழக்கு இன்று தள்ளுபடி!

Tamil nila / Nov 4th 2024, 7:49 pm
image

நாடாளுமன்றத் தேர்தல் திகதிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் 14ஆம் திகதி நடத்துவது அரசமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும், தேர்தலுக்கான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன என்றும் சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் கருத்தை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தது.


தேர்தல் திகதிக்கு எதிரான வழக்கு இன்று தள்ளுபடி நாடாளுமன்றத் தேர்தல் திகதிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் 14ஆம் திகதி நடத்துவது அரசமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.தேர்தல் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும், தேர்தலுக்கான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன என்றும் சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் கருத்தை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தது.

Advertisement

Advertisement

Advertisement