• Nov 05 2024

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Tamil nila / Nov 4th 2024, 8:08 pm
image

Advertisement

2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

 இதன்படி, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (05) நவம்பர் 30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கமைய, எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 அனைத்து பாடசாலை விண்ணப்பதாரிகள் தங்கள் பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாகவும், தனியார் விண்ணப்பதாரிகள் தாமாகவே இணையத்தினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

 இதற்காக பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்களில் இது தொடர்பான அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படித்து அதற்கேற்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (05) நவம்பர் 30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அனைத்து பாடசாலை விண்ணப்பதாரிகள் தங்கள் பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாகவும், தனியார் விண்ணப்பதாரிகள் தாமாகவே இணையத்தினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதற்காக பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்களில் இது தொடர்பான அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படித்து அதற்கேற்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement