• Nov 28 2024

கடந்த ஆறு மாதங்களில் 11,261 உணவு கடைகளுக்கு எதிராக வழக்கு! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Jul 28th 2024, 12:31 pm
image

 

கடந்த ஆறு மாதங்களில் மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்த 11,261 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவின் பொருட்கள் மற்றும் உணவின் காலாவதி திகதி குறித்து கவனம் செலுத்துமாறும், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட ஹோட்டல் அல்லது உணவகத்தில் உணவு வாங்கினால், உணவு எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்பதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பாண் விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தலைவர் டி.ஐ.உடுவர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனவரி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் சட்டப்படியான எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை சோதனையிட்டதில் 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


கடந்த ஆறு மாதங்களில் 11,261 உணவு கடைகளுக்கு எதிராக வழக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை  கடந்த ஆறு மாதங்களில் மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்த 11,261 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.உணவின் பொருட்கள் மற்றும் உணவின் காலாவதி திகதி குறித்து கவனம் செலுத்துமாறும், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட ஹோட்டல் அல்லது உணவகத்தில் உணவு வாங்கினால், உணவு எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்பதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை பாண் விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தலைவர் டி.ஐ.உடுவர குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஜனவரி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் சட்டப்படியான எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை சோதனையிட்டதில் 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement