சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கான நிரந்தர மின் பிறப்பாக்கி நேற்று (27) சனிக்கிழமை வைத்தியசாலையை வந்தடைந்ததாக வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவை மீண்டும் செயற்படவுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் வெளிநோயாளர் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவை மீண்டும் வைத்தியசாலையின் முன் பகுதிக்கு மாற்றப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சை கூடம் ஆகியவற்றை இயக்க ஆளணி மற்றும் மின்சாரம் தடைப்படும் வேளையில் மாற்றீடான மின்பிறப்பாக்கி ஆகிய அவசியமானதாக காணப்பட்டன.
தற்போது 400 கிலோ வாட்ஸ் வலுவுடைய நிரந்தர மின் பிறப்பாக்கி கிடைக்கப் பெற்றுள்ளது.
அதேவேளை ஒரு சில ஆளணி பற்றாக்குறையும் அடுத்த வாரம் அளவில் நிரப்பப்படவுள்ளது.
எனவே அடுத்த வார நடுப்பகுதியில் புதிய அலகுகளை இயக்க உத்தேசித்துள்ளோம்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவை செயற்படுத்துவதற்கான மின்பிறப்பாக்கி இல்லாததன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் சத்திர சிகிச்சைக் கூடத்தை இயக்க முடியாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், 400 கிலோ வாட்ஸ் வலுவுடைய நிரந்தர மின் பிறப்பாக்கி வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இருந்து குறித்த மின்பிறப்பாக்கி பயன்பாட்டிற்கு வரும் என்றும் அதுவரை தற்போதைய தற்காலிக மின் பிறப்பாக்கி பயன்பாட்டில் இருக்கும் எனவும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரஜீவ் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்தடைந்த நிரந்தர மின் பிறப்பாக்கி வைத்திய அத்தியட்சகர் தகவல் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கான நிரந்தர மின் பிறப்பாக்கி நேற்று (27) சனிக்கிழமை வைத்தியசாலையை வந்தடைந்ததாக வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவை மீண்டும் செயற்படவுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் வெளிநோயாளர் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவை மீண்டும் வைத்தியசாலையின் முன் பகுதிக்கு மாற்றப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சை கூடம் ஆகியவற்றை இயக்க ஆளணி மற்றும் மின்சாரம் தடைப்படும் வேளையில் மாற்றீடான மின்பிறப்பாக்கி ஆகிய அவசியமானதாக காணப்பட்டன.தற்போது 400 கிலோ வாட்ஸ் வலுவுடைய நிரந்தர மின் பிறப்பாக்கி கிடைக்கப் பெற்றுள்ளது.அதேவேளை ஒரு சில ஆளணி பற்றாக்குறையும் அடுத்த வாரம் அளவில் நிரப்பப்படவுள்ளது. எனவே அடுத்த வார நடுப்பகுதியில் புதிய அலகுகளை இயக்க உத்தேசித்துள்ளோம்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவை செயற்படுத்துவதற்கான மின்பிறப்பாக்கி இல்லாததன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் சத்திர சிகிச்சைக் கூடத்தை இயக்க முடியாத நிலை இருந்து வந்தது.இந்நிலையில், 400 கிலோ வாட்ஸ் வலுவுடைய நிரந்தர மின் பிறப்பாக்கி வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.எதிர்வரும் வாரத்தில் இருந்து குறித்த மின்பிறப்பாக்கி பயன்பாட்டிற்கு வரும் என்றும் அதுவரை தற்போதைய தற்காலிக மின் பிறப்பாக்கி பயன்பாட்டில் இருக்கும் எனவும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரஜீவ் தெரிவித்துள்ளார்.