உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் சாதகமான விதத்தில் இடம்பெற்று வருவதாகவும் எஞ்சியுள்ள பணிகள் விரைவில் முடிவடையும் எனவும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சிஐடியினர் முன்னெடுக்கும் விசாரணைகளில் சில சாதக தன்மைகளை அவதானித்துள்ளதாக கத்தோலிக்க ஆயர் பேரவையின் பேச்சாளர் ஜூட் கிறிசாந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கங்கள் அலட்சியம் செய்த சில விடயங்கள் குறித்து சிஐடியினர் தற்போது கவனம் செலுத்துகின்றனர்.
உதாரணத்திற்கு சனல் 4 ஆவணப்படத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட தனிநபர்களை தற்போது விசாரணைக்கு அழைக்கின்றனர். அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
இதனையே நாங்கள் எதிர்பார்த்தோம், இதேயளவு அர்ப்பணிப்புடன் இந்த நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதை நாங்கள் விரும்பவில்லை, குண்டு தாக்குதலை திட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எதிராகவும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கத்தோலிக்க ஆயர்பேரவையின் பேச்சாளர் ஜூட் கிறிசாந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
விக்கிரமசிங்க குழுக்களை அமைத்து அறிக்கைகளை கோரினார் என தெரிவித்துள்ள அவர்,
அரசாங்கம் அனைத்தையும் வெளிப்படையான விதத்தில் செய்யவேண்டும், விசாரணை முடிவுகள் குறித்து பொதுமக்களிற்கு தெரியப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தீவிரம் - அநுர அரசை பாராட்டிய கத்தோலிக்க ஆயர் பேரவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் சாதகமான விதத்தில் இடம்பெற்று வருவதாகவும் எஞ்சியுள்ள பணிகள் விரைவில் முடிவடையும் எனவும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.சிஐடியினர் முன்னெடுக்கும் விசாரணைகளில் சில சாதக தன்மைகளை அவதானித்துள்ளதாக கத்தோலிக்க ஆயர் பேரவையின் பேச்சாளர் ஜூட் கிறிசாந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.முன்னைய அரசாங்கங்கள் அலட்சியம் செய்த சில விடயங்கள் குறித்து சிஐடியினர் தற்போது கவனம் செலுத்துகின்றனர்.உதாரணத்திற்கு சனல் 4 ஆவணப்படத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட தனிநபர்களை தற்போது விசாரணைக்கு அழைக்கின்றனர். அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.இதனையே நாங்கள் எதிர்பார்த்தோம், இதேயளவு அர்ப்பணிப்புடன் இந்த நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய அரசாங்கம் வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதை நாங்கள் விரும்பவில்லை, குண்டு தாக்குதலை திட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எதிராகவும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கத்தோலிக்க ஆயர்பேரவையின் பேச்சாளர் ஜூட் கிறிசாந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.விக்கிரமசிங்க குழுக்களை அமைத்து அறிக்கைகளை கோரினார் என தெரிவித்துள்ள அவர்,அரசாங்கம் அனைத்தையும் வெளிப்படையான விதத்தில் செய்யவேண்டும், விசாரணை முடிவுகள் குறித்து பொதுமக்களிற்கு தெரியப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.