• Dec 14 2024

பதுளை பிரதான பஸ் நிலையத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்..!

Sharmi / Nov 27th 2024, 1:36 pm
image

பதுளை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வடிகாலில் இருந்து இன்று(27) காலை பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் பதுளை நகரைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன், பதுளை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில் பதுளை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பதுளை பிரதான பஸ் நிலையத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம். பதுளை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வடிகாலில் இருந்து இன்று(27) காலை பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த பெண் பதுளை நகரைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன், பதுளை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில் பதுளை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement