• May 10 2025

யாழில் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் மேற்கூரை எரிந்து சாம்பல்

Chithra / May 9th 2025, 10:33 pm
image


யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பழம்வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை நேற்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

பழம் வீதியில் உள்ள வைரவர் ஆலயத்தின் அலங்காரத் திருவிழா இடம்பெற்று வருகிறது. அன்றிரவு சுவாமி வெளிவீதியுலாவின் போது வானவேடிக்கைகள் இடம்பெற்ற போது அதிலிருந்து பறந்த தீப்பொறி அரங்காலய மேற்கூரையில் பட்டு எரிந்துள்ளது. 

இதனைப் பார்த்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கும், பொலிசாருக்கும், அரங்காலய நிர்வாகத்தினருக்கும் அறிவித்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போதும் கிடுகு ஓலைகள் முழுவதும் எரிந்ததுடன், மேற்கூரை மரங்கள், இலத்திரனியல் பொருள்கள், கதிரைகள் உள்ளிட்ட தளபாடங்களும்  பகுதியளவில் தீயினால் சேதமடைந்தன. 

இதனையடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு மேலதிக நடவடிக்கைக்காக பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தினரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.


யாழில் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் மேற்கூரை எரிந்து சாம்பல் யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பழம்வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை நேற்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,பழம் வீதியில் உள்ள வைரவர் ஆலயத்தின் அலங்காரத் திருவிழா இடம்பெற்று வருகிறது. அன்றிரவு சுவாமி வெளிவீதியுலாவின் போது வானவேடிக்கைகள் இடம்பெற்ற போது அதிலிருந்து பறந்த தீப்பொறி அரங்காலய மேற்கூரையில் பட்டு எரிந்துள்ளது. இதனைப் பார்த்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கும், பொலிசாருக்கும், அரங்காலய நிர்வாகத்தினருக்கும் அறிவித்துள்ளனர்.அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போதும் கிடுகு ஓலைகள் முழுவதும் எரிந்ததுடன், மேற்கூரை மரங்கள், இலத்திரனியல் பொருள்கள், கதிரைகள் உள்ளிட்ட தளபாடங்களும்  பகுதியளவில் தீயினால் சேதமடைந்தன. இதனையடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு மேலதிக நடவடிக்கைக்காக பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தினரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement