இலங்கை மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத் தளங்களில் போலியான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் எனவே பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மத்திய வங்கியில் காணப்படும் தொழில்வாய்ப்புக்கள் எதையும் மூன்றாம் தரப்பு தளங்களில் விளம்பரப்படுத்துவதில்லை எனவும்,
தமது இணையத்தளத்தின் தொழில்வாய்ப்புப் பிரிவின் கீழும் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும் மாத்திரமே இது தொடர்பான தகவல்களை வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை மத்திய வங்கி சார்பில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு வேறு வலைத்தளங்களுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ அதிகாரமளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை இலங்கை மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத் தளங்களில் போலியான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் எனவே பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,மத்திய வங்கியில் காணப்படும் தொழில்வாய்ப்புக்கள் எதையும் மூன்றாம் தரப்பு தளங்களில் விளம்பரப்படுத்துவதில்லை எனவும், தமது இணையத்தளத்தின் தொழில்வாய்ப்புப் பிரிவின் கீழும் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும் மாத்திரமே இது தொடர்பான தகவல்களை வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.அத்துடன் இலங்கை மத்திய வங்கி சார்பில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு வேறு வலைத்தளங்களுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ அதிகாரமளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.